கரந்தைத் தமிழ்ச் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரந்தைத் தமிழ்ச் சங்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தமிழ்ச் சங்கமாகும். தமிழ் மொழியை மேம்படுத்துவதற்காக 1911-ஆம் ஆண்டில் இந்தச் சங்கம் நிறுவப்பட்டது. இது நவீன தமிழ்ச் சங்கங்களில் ஒன்றாகும்.

வரலாறு
கரந்தைத் தமிழ்ச் சங்கம் 14 மே 1911 அன்று தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடியில் (கரந்தை என்றும் அழைக்கப்படுகிறது) நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தை ராதாகிருஷ்ண பிள்ளை தன்னன்பான சகோதரர் உமாமகேசுவர பிள்ளையை முதல் தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டது. [1] [2] பிறாகாலத்தில் எந்த ஒரு தனிநபரும் உரிமை கொண்டாட முடியாதவாறு 1860-இல் 21-ஆவது சட்டப்பிரிவின்படி ஆனந்த சித்திரை ஆண்டு பத்தாம் நாள் (15. மே. 1914) சங்கம் பதிவு செய்யப்பட்டது.[3]
Remove ads
செயல்பாடுகள்
தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1920-ஆம் ஆண்டில் நிறைவேற்றியது.[4] தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலைப் பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிவந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு அரசு இப்பாடலைப் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.[5] 1937-ஆம் ஆண்டு ஆகத்து 27 அன்று நடந்த கூட்டத்தில், கல்வி நிறுவனங்களில் இந்தி திணிக்கப்பட்டதை இச்சங்கம் கண்டித்தது. [6]
இச்சங்கம் 1925-ஆம் ஆண்டில் எழுத்தறிவைத் தரும் இதழான தமிழ் பொழிலைத் தொடங்கியது.[1] இச்சங்கம் தமிழ் இலக்கியம் குறித்த மாதாந்திர கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்துகிறது. [7] இச்சங்கம் தமிழ்க் கல்வியை வழங்க கல்வி நிறுவனங்களை நிறுவியது.
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads