கருவரகு

From Wikipedia, the free encyclopedia

கருவரகு
Remove ads

கருவரகு (Paspalum scrobiculatum) எனப்படுவது கைப்பும் இனிப்பும் கலந்த சுவையுள்ள ஒரு தானியம். இது நெடிய புல் போன்று 90 செமீ உயரம் வரை வளரக்கூடியது. பண்டைக் காலத்தில் இது தெற்காசியாவிற் பயிரிடப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் அயன மண்டலப் பகுதிகளில் காட்டுத் தாவரமாக விரவிக் காணப்படுகிறது. எனினும், ஆபிரிக்காவில் இது ஒரு பாரம்பரிய உணவுப் பொருளாகும்.

விரைவான உண்மைகள் கருவரகு, உயிரியல் வகைப்பாடு ...

மிகக் குறைவாகவே அறியப்பட்டதான இத்தாவரத்தின் தானிய மணிகள் போசாக்கு மிக்கவையாகவும் வேண்டாத பக்க விளைவுகளைத் தோற்றுவிக்காதவையாகவும் உள்ளன. கருவரகுப் பயிர்கள் நிலத்திற்கு வளம் சேர்ப்பனவாகும்.[1]

இந்தியாவில் கருவரகு மணிகள் வகை-II நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக் கட்டுப்பாட்டுக்குப் பயனுள்ளதான கொழுப்பமிலங்கள் உட்படப் பல்வேறு தாவரப் பதார்த்தங்களும் இதிலிருந்து பெறப்படுகின்றன. இத்தாவரம் குறித்துப் பண்டைய சிங்களச் சோதிட நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads