கர்ணன் (ஒளிப்பதிவாளர்)

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கர்ணன் (ஒலிப்பு) (இறப்பு: டிசம்பர் 13, 2012) தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஆவார். ஏறத்தாழ 150 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் 25 திரைப்படங்களில் இயக்குநராகவும் பணியாற்றியவர். கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகம் திரைப்படத்தில் அறிமுகமாகிய கர்ணன் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன், சிவப்பு சூரியன் உட்படப் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பல சாகசக் காட்சிகளைத் திறம்பட படம் பிடித்தவராக அறியப்படுகிறார். இவர் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் நீரினடியே எடுக்கப்பட்ட காட்சிகளும், இவரது மேற்கத்திய பாணி திரைப்படங்களில் குதிரைத் துரத்தல்களை படம் பிடித்த விதமும் பெரிதும் பேசப்பட்டன.

இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் பாமா, தாரா என்ற இரு மகள்களும் இருந்தனர். தமது 79ஆவது அகவையில் திசம்பர் 13, 2012 அன்று மாரடைப்பால் காலமானார்.[1]

Remove ads

இயக்கிய திரைப்படங்களில் சில

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads