சுருள்வு (விளையாட்டு)

From Wikipedia, the free encyclopedia

சுருள்வு (விளையாட்டு)
Remove ads

சுருள்வு (curling) என்ற விளையாட்டாளர்கள் பனிப்படுகையில் கற்களை நான்கு ஒன்றனுள் ஒன்றான வட்டங்களால் பிரிக்கப்பட்டுள்ள இலக்குப் பரப்பை நோக்கி சறுக்கவிட்டு விளையாடும் உடல் திறன் விளையாட்டு ஆகும். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு அணிகள் ஒவ்வொருவராக, கனத்த, தீட்டிய கருங்கற் கற்களை, (பாறைகள் எனவும் இவை அறியப்படும்) பனி சுருள்வுப் படுகையினூடாக பனியில் வட்டமாக குறிக்கப்பட்டிருக்கும் இலக்கான தங்கள் இல்லத்தை நோக்கி தள்ளிவிடுகின்றனர்.[2] ஒவ்வொரு அணிக்கும் எட்டு கற்கள் உள்ளன. விளையாட்டின் நோக்கம் ஒரு ஆட்டத்தில் மிகக்கூடிய புள்ளிகளைப் பெறுவதாகும். ஒரு முனையிலிருந்து இரு அணிகளும் தங்களின் அனைத்துக் கற்களையும் தள்ளி முடிந்தபின் இல்லத்தின் மையத்திற்கு அருகேயுள்ள கற்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஓர் ஆட்டத்தில் எட்டு அல்லது பத்து முனைகள் இருக்கும்.

Thumb
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சுருள்வு விளையாட்டாளர்கள். இரு துடைப்பாளர்களையும் கல் தள்ளுபவரையும் காண்க
Thumb
Thumb
சுருள்வு உருவ விளக்கப்படம்
Thumb
இசுக்காட்டுலாந்தில் கில்சித் என்றவிடத்தில் கொல்சியத்தில் கட்டப்பட்டுள்ள சுருள்வு குட்டை.
விரைவான உண்மைகள் உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு, பிற பெயர்கள் ...

கல் வீசுபவர் மெதுவான சுழற்சியுடன் தள்ளுவதால் கற்களுக்கு சுருண்ட பாதையில் செல்ல இயல்கிறது. மேலும் அணியின் மற்ற இருவர் சுருள்வு துடைப்பங்கள் கொண்டு அதனுடன் பயணித்து நகரும் கல்லுக்கு முன்புள்ள பனியின் நிலையை மாற்றுவதன் மூலம் கல்லின் வளைவுப்பாதையை தூண்ட முடியும். இந்த விளையாட்டில் சிறந்த பாதையையும் ஒவ்வொரு நிலைக்குமேற்ப கற்களை நிறுத்தவும் மிகுந்த உத்தியும் குழுப்பாங்கும் தேவையாகும். கல் தள்ளுபவரின் திறமையைப் பொறுத்தே வேணுடிய இடத்தில் கற்களை செலுத்த முடியும். இதனாலேயே இது "பனியின் சதுரங்கம்" எனப்படுகிறது.[3][4]

Remove ads

மேற்சான்றுகள்

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads