கற்பிட்டிக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கற்பிட்டிக் கோட்டை (Kalpitiya fort) என்பது இலங்கையில் கட்டப்பட்ட ஓர் இடச்சுக் கோட்டை ஆகும். இது 1667 ஆம் ஆண்டிற்கும் 1676 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டதாகும். புத்தளம் கடனீரேரிக்கு அருகாமையில் உள்ள குடாவாக விளங்கியமையால் கறிபிட்டி முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்பட்டது. இலங்கையில் கறுவா அதிகம் பயிரிடப்படும் பிரதேசமாக புத்தளம் விளங்கியது. இக்கறுவாவினை புத்தளத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்துச் செல்வதற்காக புத்தளம் வழியாக நீர்கொழும்பிற்குக் கால்வாய் ஒன்று ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்டது. இக்கோட்டையானது படிவப்பாறைகளையும் முருகைக்கற்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. இக்கோட்டையின் அமைப்பு சதுர வடிவத்தை ஒத்ததாகும்.[1] அத்துடன் சுவர்கள் 4 மீற்றர் உயரத்தில் காணப்படுகின்றன. இக்கோட்டை 1795 ஆம் ஆண்டில் பிரித்தானியரிடம் சரணடைந்தது. பிரித்தானியரது இராணுவத்தின் தேவைகளுக்காக இக்கோட்டை பயன்படுத்தப்பட்டு 1859 ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது.[2]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads