இடச்சு மக்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒல்லாந்தர் அல்லது இடச்சு மக்கள் (Dutch, இடச்சு: Nederlanders), அல்லது நெதர்லாந்தர் (Netherlanders) எனப்படுவோர் நெதர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு செருமானிக் இனக் குழு ஆகும்.[15][16][17][18][19] இடச்சு மொழியைப் பேசும் இவர்கள் ஒரு பொதுப் பண்பாட்டைப் பேணி வருகின்றனர். இடச்சு மக்களும் அவர்களது சந்ததியினரும் உலகளாவிய குடியேற்ற சமூகங்களில், குறிப்பாக அரூபா, சுரிநாம், கயானா, குராசோ, அர்கெந்தீனா, பிரேசில், கனடா,[20] ஆத்திரேலியா,[21] தென்னாப்பிரிக்கா,[3] நியூசிலாந்து, அமெரிக்கா.[22] ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

ஐரோப்பாவின் நடுக்காலப் பகுதியில், தாழ்ந்த நாடுகள் பிரான்சுக்கும், புனித உரோமைப் பேரரசுக்கும் இடையே எல்லைப் பகுதியில் இருந்தன. இவற்றின் பல்வேறு பிராந்தியங்களும் 13-ஆம் நூற்றாண்டு அளவில் தனியான சுயாட்சியுடன் கூடிய நாடுகளாயின.[23] ஆப்சுபர்குகளின் கீழ், நெதர்லாந்து ஒரு தனி நிருவாகத்தின் கீழ் ஒருங்கிணைந்தது. 16-ஆம், 17-ஆம் நூற்றாண்டுகளில் வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்று இடச்சுக் குடியரசு ஆனது.[24] இருந்தாலும், டச்சு சமூகத்தின் உயர்ந்த சிறப்பு நகரமயமாக்கல் சிறப்பியல்பு ஒப்பீட்டளவில் முன்கூட்டியே இடம்பெற்றிருந்தது.[25] குடியரசுக் காலத்திலேயே முதல் கட்ட இடச்சுக் குடியேற்றங்கள் ஐரோப்பாவிற்கு வெளியே இடம்பெற்றன.

இடச்சு மக்கள் பொதுவாகவே முதலாளித்துவ சமூகத்தின் முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றனர். அத்துடன் நவீன பொருளாதாரம், சமய சார்பின்மை, கட்டற்ற சந்தைமுறை போன்றவற்றால் மேற்குலகின் சக்திகளில், குறிப்பாக பிரித்தானியப் பேரரசு, மற்றும் அவர்களது பதின்மூன்று குடியேற்றங்கள் ஆகியவற்றில் பெரும் செல்வாக்கு படைத்திருந்தனர்.

இடச்சு பாரம்பரிய கலை, கலாச்சாரம் நாட்டார் பாடல், நடனங்கள், கட்டிடக்கலைப் பாணிகள், உடைகள் போன்ற பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இவற்றில் பல உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இடச்சு ஓவியர்கள், குறிப்பாக ரெம்பிரான்ட், யொஹான்னெஸ் வெர்மீர், வின்சென்ட் வான் கோ ஆகியோர் உலக அளவில் பெரிதும் புகழப்பட்டவர்கள். இடச்சுக்களின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் (கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து) ஆகும். ஆனாலும், இன்றைக காலத்தில் பெரும்பான்மையானோர் சமய சார்பற்றவர்களாக உள்ளார்கள். இடச்சுக்களில் பெருமாலானோர் மானுடம், அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு அல்லது தனிமனிதத்துவம் ஆகியவற்றுக்கு ஆரவாக உள்ளனர்.[26][27]

Remove ads

வரலாறு

கிபி முதலாம் நூற்றாண்டுகளில் செருமானிக் மக்கள் தலைமைகள் இல்லாத பழங்குடி சமூகங்களை உருவாக்கினார்கள். போர்க் காலங்களில் மட்டும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் செருமானிக்க புறச்சமய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். பொது செருமானிக் மொழியைப் பேசி வந்தார்கள். 500களில் மேற்கு நோக்கிய குடியேற்றம் நிறைவடைந்ததை அடுத்து, பெரும் கூட்டமைப்புகள் (பிராங்குகள், அலமான்னிகள், சாக்சன்கள்), உரோமைப் பேரரசு சரிய ஆரம்பித்த வேளையில், செருமானிக் சமூகங்களிடையே பல தொடர் மாற்றங்கள் ஏற்படலாயின. இவற்றில் முக்கியமாக கிறித்தவமயமாக்கம், மன்னராட்சியுடன் கூடிய புதிய அரசியல் அமைப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மேலே விவரிக்கப்பட்ட பொது நிலைமை, பெரும்பாலான நவீன ஐரோப்பிய இனக்குழுக்கள் செருமானிய பழங்குடியினர்களிடமிருந்து தோற்றுவிக்கப்பட்டாலும், பெரும்பாலான பிரீசியர், செருமானியர், ஆங்கிலேயர் மற்றும் வடக்கு செருமானிக் (இசுக்காண்டிநேவிய) மக்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும். தாழ்ந்த நாடுகளில், பிராங்குகள், பல சிறிய பழங்குடி சமூகங்களாக உரோமைப் பேரரசின் வடமேற்கு மாகாணங்களைத் தாக்கத் தொடங்கியபோது இந்த கட்டம் தொடங்கியது. இறுதியாக, கிபி 358 இல், பிராங்குகளின் மூன்று முக்கிய பிரிவுகளில் ஒன்றான சேலிய பிராங்குகள்[28] தென் நிலங்களில் ஃபோடராட்டி என்ற பகுதிகளில் குடியேறினர்.[29]

Remove ads

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. Based on adding together ஆப்ரிகானர் and Coloured populations.
  2. இடச்சு புரட்டஸ்தாந்தினர் பெரும்பாலும் சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள், இவர்களில் சிறுபான்மை லூதரனியரும் அடங்குவர்.
  3. இடச்சு புரட்டஸ்தாந்தினர் பெரும்பாலும் சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள், இவர்களில் சிறுபான்மை லூதரனியரும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து சீர்திருத்தத் திருச்சபயைச் சேர்ந்தவர்கள்.

    மேற்கோள்கள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads