கலாசான் கல்வெட்டு

இந்தோனேசியா, யோக்யகர்த்தா, கலாசான் கிராமம், கலாசான் கோயில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சைல From Wikipedia, the free encyclopedia

கலாசான் கல்வெட்டு
Remove ads

கலாசான் கல்வெட்டு (ஆங்கிலம்: Kalasan Inscription; இந்தோனேசியம்: Prasasti Kalasan) என்பது இந்தோனேசியா, யோக்யகர்த்தா, கலாசான் கிராமம், கலாசான் கோயில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சைலேந்திரா கல்வெட்டு ஆகும். இந்தக் கல்வெட்டு கிபி 700 சக ஆண்டு 778-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.[1]:88–89

விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...
Thumb
கலாசான் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கலாசான் கோயில்

இந்தக் கல்வெட்டு தற்போது ஜகார்த்தா, இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு உள்ளது; கல்வெட்டு கணக்கெடுப்பு பதிவு எண் D.147. இந்தக் கல்வெட்டு சமசுகிருத மொழியில், நாகரி எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளது.

Remove ads

சைலேந்திர மரபு கல்வெட்டு

இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சைலேந்திர மரபு (Sailendra) சார்ந்த கல்வெட்டு இதுவாகும். அதில் சைலேந்திர மரபின் பெயர் சைலேந்திரவம்சா (Sailendravamça) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டில், போதிசத்வதேவி தாராவுக்கு (Bodhisattvadevi Tara) ஒரு புனிதக் கட்டிடம் கட்டப்பட்டதைப் பற்றியும்; சைலேந்திர குடும்பத்தைச் சேர்ந்த புத்த பிக்குகளுக்கு ஒரு புத்த விகாரம் (மடம்) கட்டப்பட்டதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாசான் கோயில்

அந்தக் கட்டுமானத்திற்கு மகாராஜா ராக்காய் பனங்கரன் அவர்களைத் தூண்டுதல் செய்வதில் வெற்றி பெற்ற குரு சங் ராஜா சைலேந்திர வம்ச திலகர் (Guru Sang Raja Sailendravamçatilaka) என்பவரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ராக்காய் பனங்கரன், கலாசான் கிராமத்தை (Kalaça Village) பௌத்த சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். போதிசத்வதேவி தாராவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் கலாசான் கோயில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.[2][3]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads