கலாநிதி வீராசாமி
இந்தியா அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலாநிதி வீராசாமி (Kalanithi Veerasamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1][2]
வாழ்க்கை வரலாறு
இவர் முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆற்காடு வீராசாமியின் மகனாவார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த இவர், தனது மேற்படிப்பை சிறீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். பின்னர் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் படிப்பை இலண்டனில் படித்து முடித்தார். இவர் திமுக மருத்துவ அணியில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார்.
அரசியல் வாழ்க்கை
2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், வடசென்னை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
சர்ச்சைகள்
இவர் சூலை 22, 2024 அன்று உலக கம்மா கூட்டமைப்பு நடத்திய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு, தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கமாக 40 விழுக்காட்டிற்கு மேல் உள்ளனர் என்றும் கோயம்புத்தூரில் ஜி.டி.நாயுடு என்னும் தெலுங்கு அறிவியலாளரால் தான் வளர்ச்சி ஏற்பட்டது என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads