ஆற்காடு வீராசாமி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆற்காடு நா. வீராசாமி (ஆங்கிலம் Arcot N. Veeraswami) என்பவர் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். திமுகவின் பொருளாளராக 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார்.[4]. தமிழகச் சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவராக 2001 முதல் 2005 வரை பணியாற்றியுள்ளார். மூன்று முறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள குப்புடிச்சாத்தம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1931ஆம் ஆண்டு பிறந்தார். 1967, 1971இல் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1989ல் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும்[5], 1996, 2001 2006ல் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1977 மற்றும் 1988 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும் 10 ஆண்டுகள் மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இதற்கிடையில், சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய இவர், 1984 ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அப்போது அதிமுகவின் பிரச்சாரச் செயலாளராக இருந்த ஜெ. ஜெயலலிதாவிடம் தோல்வியடைந்தார்.[6] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை.[7][8]
Remove ads
அமைச்சர்
இவர் உணவுத்துறை அமைச்சராகவும், மின்சாரம், சுகாதாரத்துறை அமைச்சராகவும், ஊரக த்தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads