கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (Institute of Advanced Study in Education) என்பது பிரபலமாக "ஆசிரியர் கல்லூரி" என அறியப்படுகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாடு சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது. இந்தியாவின் பழமையான ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இதுவாகும்.[2][3][4]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

வரலாறு

சென்னை வேப்பேரியில் பள்ளி அரசினால் இந்நிறுவனம் 1856-ல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கல்லூரியாக 1887ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் உள்ள இதன் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இதே ஆண்டில் இந்நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகத்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.[5] 1990ஆம் ஆண்டு இந்திய அரசின் உதவியுடன் ஆசிரியர் கல்லூரி ‘கல்வியியல் மேம்பட்ட ஆய்வு நிறுவனம்' ஆகத் தரம் உயர்த்தப்பட்டது. இக்கல்லூரிக்கு 2005-ல் பல்கலைக்கழக மானியக்குழு தன்னாட்சி நிலையினை வழங்கியது.[6][7]

Remove ads

கல்வித் திட்டங்கள்

இக்கல்லூரியானது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட பின்னர் அதனுடன் இணைக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியில் இளநிலை (பி. எட்.), முதுநிலை (எம். எட்.) மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை (ஆய்வியல் நிறைஞர்/முனைவர்) வழங்குகிறது.[8][9]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

இக்கல்லூரி 1856-ல் தொடங்கப்பட்டதிலிருந்து பல குறிப்பிடத்தக்கக் கல்வியாளர்களையும் ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் ராமசுவாமி வெங்கடராமன், பிரபல சொற்பொழிவாளர், வ. ச. சீனிவாச சாஸ்திரி, சமஸ்கிருத அறிஞர், பி. சா. சுப்ரமணிய சாஸ்திரி மற்றும் மக்களவையின் முதல் துணைச் சபாநாயகர் ம. அ. அய்யங்கார் ஆகியோர் இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களில் சிலராவர்.[10]

வெளி இணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2020-08-13 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads