மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். அனந்தசயனம் அய்யங்கர் அல்லது எம். ஏ. அய்யங்கார் (Madabhushi Ananthasayanam Ayyangar அல்லது M. A. Ayyangar; 4 பிப்ரவரி 1891 - 19 மார்ச் 1978) இந்திய நாடாளுமன்றத்தில் முதல் துணை சபாநாயகராகவும், பின்னர் சபாநாயகராகவும் இருந்தார். பின்பு அவர் பீகாரின் ஆளுநராக இருந்தார்.

விரைவான உண்மைகள் மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர், இரண்டாவது இந்திய மக்களவைத் தலைவர் ...
Remove ads

பிறப்பும் குடும்பமும்

அவர் சென்னை மாகாணத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருச்சானூர் கிராமத்தில் 4 பெப்ரவரி 1891 அன்று பிறந்தார். அவரது தந்தை எம். வேங்கடவராதாச்சாரியார் ஆவார். அய்யங்கார் 1919 ஆம் ஆண்டில் சூடம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்; அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் எட்டு மகள்கள் இருந்தனர்.[1]

பணி

அவர் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் 1915 -1950 க்கு இடையில் ஒரு வழக்கறிஞரானார். மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்ட அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்; இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் 1934 ஆம் ஆண்டு மத்திய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பதியிலிருந்து முதல் மக்களவைக்கும், 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டு சித்தூர் தொகுதிகளிலிருந்து இரண்டாவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு மக்களவையின் துணைச் சபாநாயகராக கணேஷ் வாசுதேவ் மாவ்லாக்கர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 இல் மாவ்லாங்கர் இறந்த பிறகு, இவர் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் பீகாரின் ஆளுநராகப் பணியாற்றினார்.

Remove ads

சிறப்பு

இவருடைய வெண்கல சிலையானது 2007 இல் இவரது சொந்த ஊரான திருப்பதியில் நிறுவப்பட்டது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads