களக்காட்டூர் அக்னீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
களக்காட்டூர் அக்னீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் களக்காட்டூர் என்னுமிடத்தில் உள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக அக்னீசுவரர் உள்ளார். கோயிலின் அருகில் புத்தேரி என்னும் குளம் காணப்படுகிறது. அதனடிப்படையில் மூலவரை ஊருணி ஆழ்வார் என்றும் உருனி ஆழ்வார் என்றும் அழைக்கின்றனர். இக்குளம் முன்னர் சந்திரமேகத் தடாகம் என்றழைக்கப்பட்டது.[1]
அமைப்பு
தெற்கில் நுழைவாயிலைக் கொண்ட இக்கோயில் நான்கு சதுரங்களைக் கொண்ட கருவறை, அந்தராளம் மூடப்பட்ட மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. கருவறையின்மீது விமானம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகியோர் உள்ளனர். ஒரு முறை வாயு, வருணன், அக்னி, ஆகிய மூவருக்குமிடையே மோதல் ஏற்பட்டபோது அக்னி மறைந்துவிட்டார். பூசைகள் செய்யமுடியால் நின்று போயின. முனிவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் இதுகுறித்து முறையிட்டனர். சிவன் அக்னியை அழைக்க, அக்னி இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை ஆகியவற்றுடன் தோன்றினார். சிவ தரிசனம் பெற தான் இவ்வாறு செய்ததாக அக்னி கூறினார். அக்னிக்கு காட்சி தந்ததால் இறைவன் அக்னீசுவரர் என்றழைக்கப்டுகிறார்.[1]
திருவிழாக்கள்
பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads