கழுதை (விலங்கு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கழுதை (Donkey) என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.

கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]
Remove ads
பண்புகள்
பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலைநிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. அதிகமான உணவு கொடுக்கப்படும் கழுதைகள் 'லேமினிடிஸ்' என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கழுதைகளால் மிக்க ஒலி ஏற்படுத்த முடியும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads