கவுண்டர்
பட்டப் பெயர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவுண்டர் (Gounder) என்ற சொல் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கருநாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில சமூகங்களால் பயன்படுத்தப்படும் சாதி பட்டப் பெயராகும்.
வரலாறு
கவுண்டர் என்பது ராஷ்டரகூட அரசர்கள், நுளம்ப பல்லவ வேந்தர்கள், ஆட்சியில் நாடு அல்லது ஊர் அதிகாரம் பெற்றவர். காமுண்டன் எனச் சொல்லப்பட்டார். இப்பெயர் இந்நாட்டில் வந்து காமிண்டன் என்று திரிந்தது போலும் - காமுண்ட - காமிண்ட என்னும் பெயர், கிராமப் பெரிய தனக்காரர்கள் பெற்று நாளடைவே காவண்ட - காவுண்ட என்று, பின் கவண்ட - கவுண்ட என்று மருவிற்று என்பது கல்வெட்டு ஆய்வாளர்கள் கருத்து. இது போலவே கன்னட தேசத்தார் கவுடு, கௌடா என்று வழங்குகிறார்கள் - கவுண்டிக்கை என்பது ஊர்ப்பெரிய தனத்தைக் குறித்ததாக வழக்கத்திலிருக்கிறது. நாட்டுக் கவுண்டன் - ஊர்க் கவுண்டன் என்பதாலறியலாம். முதன்மையாளர் கொள்ளும் பெயரை அவர்கள் சுற்றத்தவர்களும் பாராட்டலாயினர். அங்கங்கு ஊர் முதன்மை பெற்றுள்ளவர்களான கொங்கு வேளாளர், வன்னியர், வேட்டுவர், ஊராளி கவுண்டர், குறும்பர் மற்றும் வொக்கலிகர் ஆகிய வகுப்பினர் கவுண்டர் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்.[1][2] இவர்களை தவிர கருநாடகத்திலிருந்து வந்து குடியேறிய கன்னட இனத்தை சேர்ந்த வொக்கலிகர் (கவுடா) என்பர்.[3][4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads