வொக்கலிகர்

கர்நாடகத்தின் பெரும்பான்மை சாதிகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

வொக்கலிகர்
Remove ads

வொக்கலிகர் எனப்படுவோர் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்து தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் ஒரு சமூகத்தினரைக் குறிக்கிறது. ஒக்கலிகர், ஒக்கலிகக் கவுண்டர், கவுடர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒக்கலிகர் என்றால் குடியானவன் அல்லது நிலத்தை உழுபவன் என்று பொருள். இவர்கள் திராவிடர் இனக்குழுவைச் சேர்ந்தவர்களாவர். விவசாயத்தைத் தங்களது குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கன்னடம் மொழியைத் தங்கள் பேச்சு மொழியாகக் கொண்டிருக்கின்றனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Remove ads

வரலாறு

ஒக்கலிகர்கள் இசவாகு வம்ச அல்லது கங்க குல சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகம்.இந்து சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய இவர்கள் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இசுலாமிய சமயத்தைத் தழுவ மறுத்தும், இசுலாமியர்களின் படையெடுப்பாலும், மேலும் இசுலாமிய மன்னன் ஒருவன் தங்கள் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்யக் கேட்டதாலும், அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர் என்று செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அவ்வாறு கர்நாடக மாநிலப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் பல கிளை சாதிகளாக வொக்கலிகர், வொக்கலிக கவுடா, காப்பிலியக் கவுண்டர், ஒக்கலிகக் கவுண்டர் போன்று பல பிரிவுகளாக ஆனார்கள் என்று மதுரை அரசிதழ்களில் பதிவாகி உள்ளது.[1]. இவர்கள் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா, ஹாசன், தும்கூர், சித்ரதுர்கா மற்றும் மைசூர் பகுதிகளிலிருந்து காஞ்சிபுரம் வந்து பின்னர் கோயம்புத்தூர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒட்டியப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் என்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பதிவில் பதிவாகி உள்ளது.

Remove ads

உட்பிரிவுகள்

ஒக்கலிகர் ஜாதிக்குள் 102 உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் சில:

  • மொரசு ஒக்கலிகர்
  • குஞ்சடிக ஒக்கலிகர் அல்லது காமுகுல ஒக்கலிகர் (தமிழ்நாடு)
  • ரோதாகாரு ஒக்கலிகர்
  • ஹலிகார் ஒக்கலிகர்
  • ரெட்டி ஒக்கலிகர் [ஆந்திரா]
  • குடி ஒக்கலிகர்
  • க்ராமா ஒக்கலிகர்
  • சோழ ஒக்கலிகர்
  • கீரைகார ஒக்கலிகர்
  • தரப்பாடி ஒக்கலிகர்
  • காப்பு ஒக்கலிகர்
  • நம்தாரி ஒக்கலிகர்
  • முசுக்கு ஒக்கலிகர் [முசுகு ரெட்டி]
  • நொனப ஒக்கலிகர்
  • கோட்டே ஒக்கலிகர்
  • ஹலாக்கி ஒக்கலிகர்
  • உப்பில கொலகா ஒக்கலிகர்
  • தாச ஒக்கலிகர்
  • ஹொசதேவரு ஒக்கலிகர்
  • ஜொகி ஒக்கலிகர்
  • செட்டி ஒக்கலிகர்
  • கொடவா ஒக்கலிகர்
  • கங்கட்கர்/கங்கடிகர் (கங்க சத்ரியா) ஒக்கலிகர்.
  • கொடகு ஒக்கலிகர்
Remove ads

பழக்க வழக்கங்கள்

  • இவர்கள் சமூகத்தில், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திருமணத்தில் பெண்களுக்கு தாலி அணியும் வழக்கம் இல்லை. ஆனால் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
  • "ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், நாட்டாமை என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.

படுகர்கள்

நீலகிரி மலையில் வாழும் 'படுகர்' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான் என்றும், இவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவினர்களுள் [2] ஒருவராக உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

முக்கியப் பிரமுகர்கள்

அரசியல் பங்களிப்பு

Remove ads

திரைப்படத் துறை பங்களிப்பு

தமிழ்த் திரைப்படங்களிலும் இச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களில் சிலர்;

  • திரைப்பட பாடலாசிரியர் கவியரசு.நா.காமராசன்.
  • திரைப்பட இயக்குநர் ஆர். வி. உதயக்குமார்
  • திரைப்பட தயாரிப்பு நிர்வாகி மற்றும் தயாரிப்பாளர் மல்லியம்பட்டி S மாதவன்
  • திரைப்பட நடிகை சரோஜாதேவி
  • திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் அர்ஜுன்
  • திரைப்பட நடிகை ரம்யா
  • திரைப்பட நடிகர் பீலிசிவம்
  • திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா
  • MLA மல்லையா
Remove ads

ஒக்கலிகர் கல்வி நிறுவனங்கள்

ஒக்கலிகர் சமுதாயத்தின் / சமுதாயத்தைச் சேர்ந்தவரின் நிர்வாகத்திலுள்ள சில கல்வி நிறுவனங்கள்.

Remove ads

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads