காகிசோ ரபாடா
தென் ஆப்பிரிக்க துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காகிசோ ரபாடா (Kagiso Rabada) என்பவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக நவம்பர் 2014இல் வரையிட்ட நிறைவுகள் போட்டிகளிலும் நவம்பர் 2015இல் தேர்வுப் போட்டிகளிலும் அறிமுகமானார். சனவரி 2018இல் ஐசிசியின் தேர்வு மற்றும் ஒருநாள் ஆகிய இரு தரவரிசைகளிலும் முதலிடம் பிடித்தார். சூலை 2018இல் 150 மட்டையாளர்களை வீழ்த்திய இளம் பந்துவீச்சாளர் (23 வயது) என்ற சாதனையைப் படைத்தார். ஆகத்து 2018இல் இவரை உலகின் சிறந்த இளம் வீரர் என்று விஸ்டன் அறிவித்தது.
Remove ads
துடுப்பாட்ட வாழ்க்கை
இவர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் மூலம் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[1]
2015 ஆம் ஆண்டு சூலை 10 ஆம் நாளில் நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.[2] அப்போட்டியில் 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 மட்டையாளர்களை வீழ்த்தினார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் அறிமுக போட்டியில் மும்முறை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[3][4]
பிறகு 2015 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியின் மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.[5]
2018ஆம் ஆண்டு அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 52 லீழ்த்தல்களுடன் முதலிடம் பிடித்தார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads