மட்டையாளர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்டையாளர் என்பது துடுப்பாட்டத்தில் மட்டைபிடிக்கும் வீரரைக் குறிக்கும். பொதுவாக ஒரு அணியின் 10 மட்டையாளர்களும் வெளியேறி விட்டால் அதன் ஆட்டம் முடிவுக்கு வரும். மட்டையாளர் என்ற சொல்லானது பாலின வேறுபாடின்றி இருபாலாரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மட்டையாளரின் பங்கு
விளையாட்டின் போது, மட்டையாடும் அணியின் இரண்டு வீரர்கள் வீசுகளத்தில் இருப்பார்கள், ஏனைய வீரர்கள் களத்துக்கு வெளியே உள்ள அரங்கத்தின் ஓய்வறையில் இருப்பார்கள். களத்தில் இருக்கும் இரண்டு வீரர்களும் தற்போதைய மட்டையாளர்கள் எனப்படுவர். இவ்விரு வீரர்களும் வீசுகளத்தின் இரு முனைகளில் காணப்படும் இழப்புகளுக்கு முன்பு நிற்பார்கள்.
இரண்டு மட்டையாளர்களும் வெவ்வேறு பணிகளைக் கொண்டிருக்கின்றனர்:
- மட்டையாடுபவர்- இவர் தனக்கு அருகிலுள்ள இழப்புக்கு முன்பாக நின்று, அதனை எதிர் முனையிலிருந்து பந்து வீச்சாளர் வீசும் பந்தில் இருந்து காப்பார்.
- காத்திருப்பவர்- இவர் பந்து வீச்சாளரின் எல்லைக்கோட்டில் உள்ள இழப்புக்கு முன்பு காத்திருப்பார்.
மட்டையாடுபவர், பந்துவீச்சுகளில் இருந்து இழப்பைக் காப்பதோடு அதனை மறித்து களத்திற்குள் அடித்துவிட்டு காத்திருப்பவருடன் முனைகள் மாறுவதன் மூலம் ஓட்டங்கள் பெறுவார். ஒரு முறை முனைகள் மாறினால் மட்டையாடுபவருக்கு ஒரு ஓட்டம் கிடைக்கும். களத்தடுப்பில் உள்ள அணியினர் பந்தைப்பிடித்து இழப்பைத் தாக்காத வரையில் மட்டையாளர்கள் முனைகளை மாற்றி ஓட்டங்களைக் குவிக்கலாம். முனைமாற்ற எண்ணிக்கைக்கு ஈடாக மட்டையாடுபவருக்கும் அவரது அணிக்கும் ஓட்டங்கள் கிடைக்கும். வீசப்பட்ட பந்து, களத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றால் நான்கு அல்லது ஆறு ஓட்டங்கள் வழங்கப்படும். அப்போது முனை மாற்றத்தில் மட்டையாளர் எடுத்த ஓட்டங்கள் கணக்கில் வராது. மட்டையாடுபவர் பந்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளபோது காத்திருப்பவர் ஓட்டத்துக்குத் தயாரான நிலையில் இருப்பார்.
Remove ads
மட்டையாளரின் திறமைகள்
சிறந்த மட்டையாளரிடமிருந்து எதிபார்க்கப்படும் திறமைகள் போட்டியின் வகையையும் சூழ்நிலையையும் பொறுத்து வேறுபடும். பொதுவாக மட்டையாளர்கள் தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் கூடிய வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க வேண்டப்படுவார்கள். தேர்வுப் போட்டிகளின் சில நேரங்களில் ஓட்டம் எதனையும் எடுக்காவிட்டாலும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று போட்டி நேரம் முடிவடையும் வரையில் மெதுவாக ஆட வேண்டப்படுவார்கள். ஓட்ட சராசரி மற்றும் ஓட்ட வேகம் என்பன மட்டையாளர் ஒருவரின் திறமையை அளவிடும் முறைகளாக பயன்படுத்தப்படுகிறது.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads