காக்கத்துருத்து
இந்தியாவின் கேரளாவிலுள்ள தீவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
காக்கத்துருத்து (Kakkathuruth) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் வேம்பநாட்டு ஏரியால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு ஆகும். [1] காகங்களின் தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான நேசனல் சியோகிராஃபிக் தொலைக்காட்சி , காக்கத்துருட்டில் இருந்து பார்க்கப்படும் சூரிய மறைவு நிகழ்வு உலகின் மிகச் சிறந்ததாக காட்சி அனுபவம் என வர்ணிக்கிறது.[2] கிரகத்தின் வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட 24 மிக அழகான படங்களில் ஒன்றாக இக்காட்சியை இந்நிறுவனம் சேர்த்துள்ளது. [3]
Remove ads
கண்ணோட்டம்
ஆலப்புழாவின் வடக்கு முனையில் உள்ள எழுபுன்னா கிராமத்தில் காக்கத்துருத்து தீவு அமைந்துள்ளது. [4] ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரமல்லூர் காக்கத்தூருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியாகும். [5] எரமல்லூரில் இருந்து படகு மூலம் தீவை அணுகலாம். மூன்று கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. [6] வேம்பநாட்டு ஏரியின் நடுவில் அமைந்துள்ள காக்கத்துருத்து காகங்கள் மற்றும் பல பறவைகளின் புகலிடமாகமாகவும் பறவை ஆர்வலர்களின் விருப்பமான இடமாகவும் உள்ளது. [7]
தீவில் பெரிய சாலைகள் எதுவும் இல்லை மற்றும் மண் சாலைகளில் மிதிவண்டி முக்கிய வாகனமாகப் பயன்படுத்தப்படுகிறது. தீவில் அங்கன்வாடியும் (குழந்தைகளுக்கான பள்ளி) மற்றும் ஆயுர்வேத மருத்துவமனையும் உள்ளன. [8] சதுப்பு நிலங்கள், தென்னந்தோப்புகள் எங்கும் காணக்கூடியவையாக உள்ளன. வேம்பநாட்டு காயலின் பரந்த தன்மை காக்காத்துருத்தை ஆலப்புழாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. [9] 2016 ஆம் ஆண்டில், நேசல் சியோகிராஃபிக் தொலைக் காட்சி நிறுவனம் உலகின் 24 மிக அழகான இடங்களில் ஒன்றாக காக்காத்துருத்தை தேர்ந்தெடுத்தது. [10]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads