காசிநாத் திரியம்பக் தெலாங்

இந்தியவியல் அறிஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காசிநாத் திரியம்பக் தெலாங் (Kashinath Trimbak Telang) (பிறப்பு:20 ஆகஸ்டு 1850: இறப்பு:1 செப்டம்பர் 1893) மும்பையில் பிறந்த பிறந்த இந்தியவியல் அறிஞரும், மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதியரசரும் ஆவார். 20 ஆகஸ்டு 1850-இல் சரஸ்வத் பிராமணர் சமூகத்தில் பிறந்த காசிநாத் திரியம்பக தெலாங்[1]தமது 5-ஆம் வயதில் அமர்சந்த் வாடியின் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் படித்தார். 1859-இல் மும்பையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளிப்படிப்பு முடித்த தெலாங் எல்பிங்ஸ்டன் கல்லூரியில் சமசுகிருதம், முதுகலை படிப்பு மற்றும் சட்டப் படிப்பு முடித்தார். மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியில் இருந்த போது, 1872-இல் பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்றார்.[2]

உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருப்பினும், இலக்கியம், சமூகம், உள்ளாட்சி, கல்வி மற்றும் அரசியல் துறைகளில் சிறந்து பணியாற்றினார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1893-ஆம் ஆண்டு முடிய, இறக்கும் வரை பணியாற்றினார்.[3]

இவர் சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழியில் பெரும் புலமையுடன் விளங்கினார். மேலும் இவர் சமசுகிருத மொழியில் உள்ள இந்து சமய தர்மசாத்திரங்களில் நன்கு கற்று இருந்ததால், ஐரோப்பா நாடுகளின் இந்தியவியல் அறிஞர்களுக்கு, இந்து சமய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் ஆலோசகராக இருந்தார். மேலும் இவர் ஆசியச் சமூகத்தின் மும்பை மாகாணக் கிளையின் தலைவராக இருந்தார்.

மேலும் இவர் 1882-இல் பகவத் கீதை, சனத்சுஜாதீயம் மற்றும் அநு கீதை[4][5] ஆகிய மூன்று நூல்களை சமசுகிருத மொழியிலியிலிருந்து, ஆங்கிலத்தில் செய்யுள் மற்றும் வசன நடையில் மொழிபெயர்த்தார். இவரது நூல்கள், கிழக்கின் புனித நூல்கள் வரிசையில் எட்டாவதாக உள்ளது.

1884-இல் இவர் விசாகதத்தர் சமசுகிருத மொழியில் இயற்றிய புகழ் பெற்ற நாடக நூலான முத்திரா ராட்சசம் எனும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

Remove ads

எழுத்துப் பணிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads