காசுமீர சைவம்

From Wikipedia, the free encyclopedia

காசுமீர சைவம்
Remove ads

காஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்டது.[1][2] வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள்.

Thumb
சைவ சமயத்தின் வளர்ச்சிப் படி நிலைகள்

காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகரித்தது.

அறிஞர்கள், உடல் வேறு, மனம் வேறு என்பதை ஒத்துக் கொள்ளாத கோட்பாடான பொருண்மை வாதத்துடன், காஷ்மீர சைவத்தை வகைப்படுத்துகிறார்கள்.[3]

அனைத்துயிர்களின் உணர்வுகளுக்கு ஆதாரமான சிவனைத் தான் என உணர்வதே காஷ்மீர சைவத்தின் நோக்கமாகும்.[4][5]

பொதுவாக காஷ்மீர சைவ சமயம் ஆகம சாஸ்திரம், ஸ்பந்த சாஸ்திரம் மற்றும் பிரத்தியவிஞ்ஞான சாஸ்திரம் எனும் மூன்று அடிப்படைப் பகுதிகளில் அடங்கும்.[6]

Remove ads

காஷ்மீர சைவ நூல்கள்

  • விஞ்ஞான பைரவ தந்திரம்
  • வசுகுப்தரின் சிவ சூத்திரங்கள்

ஆன்மிகப் பயிற்சிகள்

முக்தி நிலை அடைவதற்கு ஆன்மிகப் பயிற்சி அவசியம். காஷ்மீர சைவத்தில் உடல் தூய்மை, மனத்தூய்மை, மெய்யறிவு மற்றும் முறைகள் அற்ற முறை என நான்கு ஆன்மிகப் பயிற்சி முறைகளை விளக்குகிறது.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads