சிவசூத்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவசூத்திரம் என்பது காஷ்மீர சைவத்தின் நிறுவுனரான வசுகுப்தர் (கி.பி 860–925) எனும் பெரியோனால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.[1][2] காஷ்மீர சைவர்களின் புனித நூல்களுள் இது ஒன்று.
சைவநூல்
பாணினியின் சங்கத மொழியின் ஒலியன்களைப் பற்றிக் குறிப்பிடும் பதினான்கு சிவசூத்திரங்களினின்றும் இச்சிவசூத்திரம் வேறானது. மேலும் தமிழில் வழங்கும் ஓஷோவின் சிவசூத்திரம் இது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாறு
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்தர், ஒரு கனவில் கண்ட திருக்காட்சியை அடுத்து இச்சிவசூத்திரங்களை எழுதினார். சிவசூத்திரங்கள் வசுகுப்தருக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் சங்கரோபால எனும் மலைக்குன்று இன்றும் காசுமீர சைவ அடியவர்களால் யாத்திரை சென்று வழிபடப்படுகின்றது.
விளக்கவுரைகள்
வசுகுப்த சிவசூத்திரத்திற்கு, பிற்காலத்தில் பல விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேமராயரால் எழுதப்பட்ட விமர்சினியும், பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரரால் எழுதப்பட்ட வார்த்திகமும் இவற்றில் முக்கியமானவை. இவை அண்மைக்காலத்தில் ஆங்கிலத்திலும் இத்தாலியிலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
இதனையும் காண்க
மேலதிக வாசிப்புக்கு
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads