காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் (ஆதீபிதேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் மூலவர் - பெரிய ஆவுடையாரின் பெரிய சிவலிங்க மூர்த்தியாக கம்பீரமாக காட்சித் தரும் இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]
Remove ads
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: ஆதீபிதேசர்
- இறைவியார்:
- தல விருட்சம்:
- தீர்த்தம்:
- வழிபட்டோர்: திருமால்
தல வரலாறு
சரசுவதி ஆறுருவம் கொண்டு, காஞ்சியில் பிரமன் செய்யும் வேள்வியை அழிப்பதற்காக வந்தபோது, சிவபெருமானின் ஆணைப்படி திருமால் சென்று அதனைத் தடுக்க முற்பட்டார், அவ்வாறானது நள்ளிரவில் காஞ்சி நகரை அடைய, திருமால் அவ்விருளில் ஆற்றின் வருகையைக் காண்பதற்காக ஒளியாய் நின்று, "ஆதீபிதேசம்" என்ற நாமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரம்பெற்று, சரசுவதியாகிய அவ்வாற்றைத் தடுத்து நிறுத்தி பிரமனின் வேள்வியைக் காத்தருளினார். என்பது இத்தல வரலாறாக அறியப்படுகிறது.[2]
Remove ads
தல விளக்கம்
ஆதீபிதேசம் (தீபிதம்-விளக்கொளி) சிவாத்தானத்தில் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த நதியைத் தடைசெய்ய வந்த திருமால் நள்ளிரவில் விளக்கொளியாய் நின்று அப்பொருள் பயக்கும் ஆதீபிதேசர் எனச் சிவலிங்கம் நிறுவிப் போற்றி இத்தலத்திற்கு எதிரில் விளக்கொளிப் பெருமாள் என்னும் திருப்பெயரைச் சிவபிரானார் வழங்க வீற்றிருக்கின்றனர். விளக்கொளிப் பெருமாள் வழிபட்ட விளக்கொளியீசரைப் போற்றினோர் வேண்டிய வரங்களைப் பெற்று முத்தியையும் பெறுவரென்பது இத்தல விளக்கமாக உள்ளது.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்பகுதியில் ஆலடிபிள்ளையார் கொயில் தெருவில் கீரைமன்டபம் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து கீழ்ரோடு எனப்படும் உத்திரமேரூர் செல்லும் பிரதான சாலையின் 2-வது கிலோமீட்டர் தொலைவில் இத்தலமுள்ளது.[4]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads