காஞ்சிபுரம் சித்தீசர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் (சித்தீசம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் சித்தர்கள் அட்டமாசித்திகைளைப் பெறுவதற்காகச் வழிபட்ட இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் காஞ்சிபுரம் சித்தீசம்., பெயர் ...
Remove ads

இறைவர், வழிபட்டோர்

தல விளக்கம்

சித்தீசத்தின் தல விளக்கம் யாதெனில், இமய மன்னர் மகளார், கம்பை நதிக்கரையில் தவஞ்செய்யும் காலத்தில் மஞ்சட் காப்பினைத் திருமேனியில் திமிர்ந்து முழுகிய வெள்ளப் பெருக்கு நறுமணம் பரந்து பாய்ந்து மஞ்சள்நீர் நதி என்னும் பெயரொடு அயலெலாம் இடங்கொண்டு செல்லும் அளவே கங்கை சடைப் பிரானார் அருளடங்காது மீதுவழியும் மகிழ்ச்சியொடும் சிவலிங்க வடிவாய் அவ்விடத்தே முளைத்தனர்.

அக்காரணத்தால் அவருக்கு ‘மஞ்சள்நீர்க் கூத்தர்’ என்னும் திருப் பெயர் வழங்கினர். நடம்புரியும் திருவடிகளைச் சித்தர் மிகப்பலர் அணைந்து போற்றிப் பெருஞ் சித்திகளைப் பெறுதலினால் பெருமை நிரம்பிய சித்தீசர் என்னும் திருப்பெயரானும் உலகரால் போற்றப்பெறுவர். அவ்வண்ணலார் திருமுன்பில் கிணறு ஒன்றுள்ளது. அத்தீர்த்தத்தில் ஞாயிறு, சனிக்கிழமைகளில் முழுகிப் பெருமானை வணங்கும் வெற்றி வாழ்க்கையர்க்குப் பிறவி நோய் ஓட்டெடுக்கும். இத்தீர்த்தம் சித்த தீர்த்தம் எனப்பெறும். இத்தலம் குயவர் வீதியில் மஞ்சள் நீர்க்கரைக் கண் உள்ளது.[3]

Remove ads

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் காமராசர் வீதியில் மஞ்சள்நீர் கால்வாய்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வந்தவாசி, உத்திரமேரூர், செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையில் ½ கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகத்தின் தென்புலத்தில் இத்தலம் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads