காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் (வீரராகவேசம் லட்சுமணேசம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இலக்குமணன் வழிபட்ட லிங்கமும் இராமபிரான் வழிபட்ட லிங்கமும் அருகருகே உள்ள இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் காஞ்சிபுரம் வீரராகவேசம், லட்சுமணேசம்., பெயர் ...
Remove ads

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

சீதாபிராட்டியைப் பிரிந்திருந்த இராபிரான், அகத்தியமுனிவரின் அறிவுரைப்படி, காஞ்சிக்கு வந்து "வீரராகவேசர்" என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். இறைவன் காட்சி தந்து, இராமபிரானுக்கு பாசுபதம், பிரமாத்திரம், நாராயணாத்திரம் முதலிய படைக்கலங்களையும், வலிமையையும் தந்தருளி பகைவரை வென்று சீதையை மீட்க அருள்புரிந்தார் என்பது தல வரலாறாகும்.[2]

தல விளக்கம்

வீரராகவேசம் எனும் இத்தல விளக்கத்தால் அறிவது, இராமன் தன் மனைவியாகிய சீதையை இராவணன் கவர்ந்து சென்றமையால் வருந்தி அம்மனைவியைப் பெறுமாறும் இராவணனை வெல்லுமாறும் உபாயமும் உபதேசமும் புரிந்த அகத்தியர் சொல்வழி ‘வீரராகவேசன்’ என்னும் பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றினன்.

பிரானார், வெளிநின்று வீரம் வேண்டினை ஆகலின் வீரராகவன் என்னும் பெயரொடும் விளங்குக’ எனவும், பாசுபதப்படையை வழங்கித் தேவர் பிறரைக்கொண்டு அவரவர் படைகளை வழங்குவித்து இலக்குவனொடும் சுக்கிரிவன் முதலாம் படைத் தலைவனொடும் இலங்கை புகுந்து இராவணனை அவன் சுற்றத்தோடும் அழித்துச் சீதையை மீட்டுக் கொண்டுபோய் அயோத்தியை அடைந்து அரசு செய்க’ எனவும் அருள் புரிந்தனர்.

அகத்தியர் உணர்த்திய தத்துவங்களின் ஐயங்களை இராமனுக்குப் போக்கிய சிவபிரானார், இங்கு வணங்கினோர் பகைவரை வென்று வாழ்ந்து திருவருளை எய்துவர் என அருளி மறைந்தனர். இத்தலம் புத்தேரி தெருவிற்குத் தெற்கிலுள்ள வயலில் அமைந்துள்ளது..[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் புத்தேரி தெருவின் தென்திசை வயல்வெளியில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் 1 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் செல்லும் சாலையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads