அயோத்தி

இந்தியாவின் உத்தரபிரதேச நகரம் From Wikipedia, the free encyclopedia

அயோத்திmap
Remove ads

அயோத்தி (ஆங்கிலம்: Ayodhya) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், அயோத்தி மாநகராட்சியும் உள்ளது. இந்நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அவதி மொழி, சமசுகிருதம் - பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும். பண்டைய அயோத்தி நகரத்தை சாகேதம் என்றும் அழைப்பர்.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

அயோத்தி நகரம், மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 135 கி.மீ., கான்பூரிலிருந்து 225 கி.மீ., வாரணாசியிலிருந்து 203 கி.மீ., அலகாபாத்திலிருந்து 167 கி.மீ., புதுதில்லியிலிருந்து 605 கி.மீ. மற்றும் பாட்னாவிலிருந்து 402 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

புவியியல்

அயோத்தி நகரம் உத்தரப் பிரதேசத்தின் அவத் பிர்தேசத்தில் சரயு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 26.8°N 82.2°E / 26.8; 82.2 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 93 மீட்டர் (305 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், ராம ஜென்மபூமியும் அயோத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.

அவத் பிரதேசம், இசுலாமியர்களின் ஆட்சியில் அயோத்தி நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது. பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அவ்விடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக சங்கப் பரிவார் இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி சங்கப் பரிவார இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. அயோத்தி பிரச்சினை தற்போது 2019-உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தீர்க்கப்பட்டு, அயோத்தியில் இராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி கட்ட வகை செய்யப்பட்டுள்ளது.

இராமர் கோயில் பூமிபூசை மற்றும் அடிக்கல் நாட்டுதல்

  • 2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5ஆம் நாள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இராமர் கோயில் கட்ட பூமிபூசை நடத்தப்பட்டது; மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • 22.01.2024 திங்கள் கிழமை அன்று பிரதமர் தலைமையில் காேவில் திறக்கப்பட உள்ளது.

தமிழர்களின் இராமர்

அயோத்தியில் உள்ள நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம்[2]. இது நாட்டுக்கோட்டை நகரத்தாரால் உருவாக்கப்பட்டது. இதன் உள்ளே ஒரு இராமர் கோவில் உள்ளது இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் பொ.ஊ. 1885இல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.[2] தமிழர் கட்டிய கோவில் என்பதால் இது தமிழர்களின் இராமர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தமிழர்கள் அனைவரும் தங்கலாம். மூன்று வேளையும் தமிழ் நாட்டு உணவுகள் கிடைக்கும்.

பொ.ஊ. 1885முதல் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் அயோத்தியில் தேர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1980முதல் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் காலப் போக்கில் தேர் சிதிலமடைந்து. மீண்டும் மார்ச் 15, 2020இல் காரைக்குடியில் புதிய தேர் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் செய்யப்பட்டு அயோத்தி கொண்டு செல்லப்பட்டது.[3]

Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அயோத்தி நகரத்தில் 55,890 பேர் வாழ்கின்றனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5976 (10.69%) உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.15% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 93.23%, இசுலாமியர்கள் 6.19% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.58% ஆகவுள்ளனர்.[4] அயோத்தியில் அவதி மொழி, இந்தி மற்றும் உருது மொழிகள் பேசப்படுகிறது.

அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம்

மூன்று நடைமேடைகளுடன் அமைந்த அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம், கோரக்பூர், கான்பூர், லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, ஆசான்சோல், கொல்கத்தா, கவுகாத்தி, அமிர்தசரஸ், மும்பை, தில்லி, சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads