காட்சில்லா விஸ். காங்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காட்சில்லா விஸ். காங் (Godzilla vs. Kong) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 'காட்சில்லா' திரைப்படத் தொடர்களின் 36 வது படமும் 'காங்' திரைப்படத் தொடர்களின் 12 வது படமும் ஆகும். ஆடம் விங்கார்ட் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட், மில்லி பாபி பிரவுன், ரெபேக்கா ஹால், பிரையன் டைரி கேன்றி, ஷுன் ஒகுரி, ஈசா கோன்சலஸ், ஜூலியன் டெனிசன், லான்ஸ் ரெட்டிக், கைல் சாண்ட்லர் மற்றும் டெமியோன் பிச்சிர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

விரைவான உண்மைகள் காட்சில்லா விஸ். காங், இயக்கம் ...

இந்த படம் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாராட்டினாலும் திரைக்கதை மற்றும் மனித கதாபாத்திரங்கள் மீது எதிர்மறையான விமர்சனங்கள் விமர்சிக்கப்பட்டது. இப்படம் 24 மார்ச் 2021 ஆம் ஆண்டு வெளியாகி 390.4 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. இது 2021 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது படமாக அமைந்தது.

Remove ads

கதை சுருக்கம்

இப்படத்தின் கதை இஸ்கல் தீவில் ராட்ச 'காங்' என்ற குரங்கை பாதுகாத்து வரும் ஒரு குழு. அந்த குழுவில் இருக்கும் ஒரு காட்டுவாசி பெண்ணை தத்து எடுத்து வளர்ந்துவரும் காங். அவளுடன் சைகை மொழியில் பேசிவருகின்றது. அத்துடன் அவளின் கட்டளைகளைக்கு மட்டும் அடிபணிகின்றது. ஒரு நிறுவனத்தின் தூண்டுதலில் ஹோலோ எர்த் என்னும் ராட்ச மிருகங்கள் வாழும் இடத்திற்கு காங்-யை அழைத்து செல்கின்றனர். கடல் வழியாக அந்தாட்டிக்காவுக்கு செல்லும் இந்த குழு, இடையில் காட்சில்லா என்ற மிருகத்தால் காங் மற்றும் அந்த குழுவினர் தாக்க படுகின்றனர்.

நடுக்கடலில் இந்த இரண்டு மிருகங்களுக்கும் இடையே கடுமையான சண்டை நிகழ்கிறது. ஆனால் கடலில் வாழும் காட்சில்லா, காங்-யை எளிதாக விழ்த்துகிறது. பின் குழு ஒரு வழியாக காங்-யை ஹோலோ எர்த்திற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு காங் தனது முன்னோர்கள் வாழ்ந்த இருப்பிடத்தை கண்டுபிடித்து, மகிழ்ச்சியை உள்ளது. அச்சமயம் காங்குக்கு உதவுவதாக கூறி ஏமாற்றி சூழ்ச்சி செய்து, இந்த காட்சில்லா, காங் போன்ற ராட்சச மிருகங்களை அழிக்கும் நோக்கத்தில் உள்ள அந்த நிறுவனத்திற்கும் காங் பாதுகாவலர்களுக்கும் இடையே சண்டை நடக்கிறது.

பின் காட்சில்லா காங்கை யுத்தத்திற்கு அழைக்க பின் இந்த இரண்டு மிருகங்களும் மோதி கொள்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ராட்சச மிருகம் வந்து காட்சில்லாவை தாக்குகின்றது. பின் காங் உதவியில் அந்த இயந்திர மெச்சகாட்சில்லாவை இருவரும் இணைந்து அழிக்கின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads