காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
Remove ads

காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோவில், அமைவிடம் ...
Thumb
காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்புத் தோறறம்
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயில் போகர் குன்றின் அடிவாரத்தில் ஏறக்குறைய ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் முகப்பில் அகன்ற மண்டபம் அமைந்துள்ளது. இந்த ஒரே கோயிலுக்குள் முருகனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் சுப்ரமணியர் (வள்ளி, தெய்வாணையுடன்) சன்னதிக்கு எதிரில் கொடிக்கம்பமும், வரதராசபெருமாள் சந்நிதிக்கு எதிரில் கருடகம்பமும் அமைந்துள்ளது. இந்த இரண்டு சந்நிதிகளும் தனித்தனி வாயில்களுடன் உள்ளன. மேலும் இங்கு விநாயகர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலின் எதிரில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. அதில் நிறைய திருமணங்கள் நடத்தப்படுகின்றன.[2] இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

Remove ads

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் முக்கிய திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறுகிறது. ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

அமைவிடம்

இக்கோயில் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அன்னதானம்

இக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தின்படி நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads