காட்டு நாகம்
பரவலாக ஆப்பிரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் காணப்படும் நஞ்சுள்ள பாம்பி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்டு நாகம் (forest cobra, black cobra அல்லது black and white-lipped cobra; அறிவியல் பெயர்: Naja melanoleuca) என்பது நாக வகையைச் சேர்ந்த நஞ்சுள்ள பாம்பினம் ஆகும்.[1] இது ஆப்பிரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது.[2] சுமார் 10 அடி நீளம் வரை வளரும் இதுவே நாக இனங்களில் மிகப்பெரிய அளவுடையது ஆகும். இது நீரிலும் நன்றாக நீந்தவல்லது.
Remove ads
சொற்தோற்றம்
காட்டு நாகத்தின் அறிவியல் பெயர் Naja melanoleuca. இதில் Naja என்ற லத்தீன் சொல்லானது நாகம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[3] melanoleuca என்றால் பண்டைய கிரேக்க மொழியில் கருப்பு (melano) வெள்ளை (leuca) என்று பொருள்.[4][5] இந்த இனம் கருநாகம் மற்றும் கருப்பு வெள்ளை உதட்டுடைய நாகம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads