காண்டுவா

இந்தியாவில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காண்டுவா என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் நிமர் பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் கிழக்கு நிமர் மாவட்டம் என்று முன்னர் அறியப்பட்ட காண்டுவா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.

காண்டுவா பழங்கால நகரம் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள பல நகரங்களைப் போலவே பல வழிபாட்டுத் தலங்களும் இங்கு அமையப் பெற்றுள்ளன. பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் இந்து அல்லது சமண வணக்கஸ்தலங்கள் ஆகும். கி.மு 12 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் சமண மதத்தின் மையமாக இருந்தது. பிரித்தானிய ஆட்சியின் போது, ​​இந்நகரிற்கு அருகிலுள்ள புர்ஹான்பூர் (இப்போது ஒரு தனி மாவட்டம்) மேற்கு நிமர் பிராந்தியத்தின் முக்கிய வணிக மையமாக திகழ்ந்தது.

காண்டுவா பெரிய தொடருந்து சந்திப்பாகும். இந்தூரை டெக்கனுடன் இணைக்கும் மால்வா பாதை, மும்பையிலிருந்து கொல்கத்தா வரையிலான பிரதான கிழக்கு-மேற்கு பாதையை இங்கு சந்திக்கிறது.[1]

2019 ஆம் ஆண்டு மே மாதம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நந்த்குமார் சிங் சவுகான் என்பவர் காண்டுவா மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

Remove ads

புவியியல்

காண்டுவா 21.83 ° வடக்கு 76.33 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[3] இது சராசரியாக 313 மீட்டர் (1026 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

புள்ளிவிபரங்கள்

2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி, காண்டுவாவில் 200,738 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 102,901 பேர் ஆண்களும், 97,837 பேர் பெண்களும் ஆவார்கள். காண்டுவாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 75.5% ஆகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 78.9% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 71.9% ஆகவும் இருந்தது. காண்டுவாவில் ஆறு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை, 24,801 ஆகும். அதாவது மொத்த மக்கட் தொகையில் 12.4% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள். 2011 ஆம் ஆண்டில் காண்டுவாவில் 39002 வீடுகள் இருந்தன.[4]

Remove ads

பொருளாதாரம்

காண்டுவா நகரமானது உள்ளூர் பயிர்களான பருத்தி, கோதுமை (கண்ட்வா 2), சோயா அவரை மற்றும் பலவகையான பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு பிரபலமானது. இங்கு பயிரிடப்படும் கோதுமை வகை காண்ட்வா 2 என்பது அதன் நறுமணம், நிறம் மற்றும் தரம் ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் பிரபலமானது. முந்தைய காண்டுவா மத்திய இந்தியாவின் கஞ்சா பயிரிடப்படும் ஒரே நகரமாக காணப்பட்டது.

இந்திரா சாகர் பரியோஜ்னா என்ற நீர்மின் திட்டம் கண்ட்வாவுக்கு அருகில் அமைந்துள்ளது. சாந்த் சிங்காஜி வெப்ப மின் திட்டம் (2 × 600 மெகாவாட்) காண்டுவாவில் உள்ள ஒரு சிறிய நகரமான முண்டியில் உள்ள டோங்கலியா கிராமத்தில் அமைந்துள்ளது.

புகழ்

சூரஜ் குந்தா, பத்மா குளம், பீமா குளம் மற்றும் ராமேஸ்வர் குளம் ஆகிய நான்கு குளங்களும் நான்கு திசைகளில் உள்ளன. இவை வரலாற்றுடன் தொடர்புடையன.

பண்டைய துல்ஜா பவானி கோயில், தாதா தர்பார் மற்றும் நவீன நவ-சண்டி தேவி தாம் ஆகியவை இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான தாதா தர்பார் கண்ட்வா , நாகூன் தலாப் மற்றும் ஹனுமந்தியா தீவு என்பன இங்கு அமைந்திருக்கின்றன.

புகழ்பெற்ற நடிகர் / பாடகர் கிஷோர் குமார் காண்ட்வாவில் பிறந்தார்.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads