காத்தாடி

கல்யாண் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காத்தாடி (Kaathadi), கல்யாண் இயக்கத்தில், சிறீநிவாஸ் சம்பந்தம், வி.என். ரஞ்சித்குமார், கே. சசிகுமார் ஆகியோரின் தயாரிப்பில் வெளியான தமிழ்ப்படம். அவிசேக் கார்த்திக், தன்சிகா, டேனியல் ஆனி போப் ஆகியோர் இத்திரைப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆர். பவன், தீபன். பி ஆகியோரின் இசையிலும், ஜேமின் ஜோம் ஐயனத்தின் ஒளிப்பதிவிலும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பிலும் பெப்ருவரி 23, 2018இல்[1] திரையரங்குகளில் வெளியான தமிழ்த்திரைப்படம்.

விரைவான உண்மைகள் காத்தாடி, இயக்கம் ...
Remove ads

நடிப்பு

படப்பணிகள்

காத்தாடி படத்தின் இயக்குநர் கல்யாண் நாளைய இயக்குநர் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர். இவர் அக்டோபர் 2014இல் இருந்து காத்தாடி படப்பணிகளைத் தொடங்கினார். இப்படத்தின் பின் உருவாக்கப் பணிகள் 2015இல் முடிந்தன.[2][3] இத்திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னை, கேரளா, ஏலகிரி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது[4][5] இப்படத்தின் முன்னோட்டம் 21 பெப்ருவரி 2018இல் வெளியானது.[6]

இசை

விரைவான உண்மைகள் காத்தாடி, இசை ஆர். பவன்- தீபன். பி ...

இத்திரைப்படத்திற்கான இசையை ஆர். பவனும், தீபன். பியும் அமைத்துள்ளனர். இப்டத்தின் பாடல் வெளியீடு 3 சூன் 2016இல் மியூசிக்247ஆல் வெளியிடப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் பாடல் குறிப்புகள், # ...

கதை

இத்திரைப்படம் பரபரப்பான நகைச்சுவைத் திரைப்படம். தொழிலதிர் ஒருவரின் குழந்தை சாதன்யாவை அவிஷேக், சுமார் மூஞ்சி குமார் டேனியல் ஆகிய இருவரும் பணத்திற்காக கடத்தி விடுகின்றனர். காவல் அலுவராக நடித்திருக்கும் தன்ஷிகா கடத்தல்காரர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றுகின்றனர் என்பதே கதை.[7]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads