கோட்டா சீனிவாச ராவ்
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டா சீனிவாச ராவ் (Kota Srinivasa Rao)(10 சூலை 1942 – 13 சூலை 2025) இந்திய நடிகரும், பாடகரும் ஆவார்.[1] இவர் ஆந்திரத் திரைப்படத்துறையிலும், தமிழ்த் திரைப்படத்துறையிலும் அதிகத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தாலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். 1999 - 2004 வரை ஆந்திரப் பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
Remove ads
இளமை
கோட்டா சீனிவாச ராவ் 1942ஆம் ஆண்டு சூலை 10ஆம் தேதி இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காங்கிபாடு கிராமத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை சீதா ராம ஆஞ்சநேயுலு. இவரது தந்தை மருத்துவராவார். சீனிவாச ராவ் ஆரம்பத்தில் மருத்துவராக வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தார், ஆனால் நடிப்பின் மீது கொண்ட காதலால் இறுதியில் அதைச் செய்ய முடியவில்லை. கல்லூரிக் காலத்தில் நாடகங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இளநிலை அறிவியல் பட்டம் பெற்ற இவர், திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி ஊழியராகப் பணியாற்றினார்.
Remove ads
குடும்பம்
சீனிவாச ராவின் தம்பி கோட்டா சங்கர ராவும் நடிகர் ஆவார். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் இவரது தம்பொ முதன்மையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துவருகிறார்.[3] சீனிவாச ராவ், ருக்மணியை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் (2 மகள்கள், ஒரு மகன்). இவர்களது மகன், கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத். இவர் 20 சூன் 2010 அன்று ஐதராபாத்தில் சாலை விபத்து ஒன்றில் இறந்தார்.[4] பிரசாத் ஜே. டி. சக்கரவர்த்தியின் சித்தம் படத்திலும், கயம் 2 (2010) படத்திலும் தன்து தந்தையுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.
தமிழ்த் திரைப்படங்கள்
- மாசி (2012)
- தாண்டவம் (திரைப்படம்) (2012) ... உள்துறை அமைச்சர்
- சகுனி (தமிழ்த் திரைப்படம்) (2012) ... பெருமாள்
- மம்பட்டியான் (2011)
- கிருஷ்ண லீலை (2011)
- தலக்கோணம் (2011) ... உள்துறை அமைச்சர்
- கோ (2011) ... ஆளவந்தான்
- பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்) (2011) ... சிவலிங்கம்
- ரத்த சரித்திரம் (2010)... ராகமணி ரெட்டி
- அம்பாசமுத்திரம் அம்பானி (2010)
- கனகவேல் காக்க (2010)
- மோகினி (2010)
- ஓடிப்போலாமா (2009)
- லாடம் (2009) ... பாவாடை
- பெருமாள் (2009)
- கார்த்திக் அனிதா (2009)... கார்த்திகின் தந்தை
- தனம் (2008)... வேதகிரி
- சத்தியம் (2008)
- சாது மிரண்டா (2008) .. வெங்கட சபாபதி
- கொக்கி (2006)
- பரமசிவம் (2005)
- திருப்பாச்சி (திரைப்படம்) (2005) ... சனியன் சகடை
- ஜெய்சூர்யா (2005)
- ஜோர் (2004)
- ஏய் (2004)
- குத்து (திரைப்படம்) (2004)
- சாமி (திரைப்படம்) (2003) ... பெருமாள் பிச்சை
- கோ (2011)
Remove ads
பாடகராக
- கபீர் சிங் (2012)
விருதுகள்
- பத்மசிறீ, 2015, இந்திய அரசு
- நந்தி விருதுகள்[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads