காத்தியாயனர்

ஆரம்பகால பௌத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உருவம்; கௌதம புத்தரின் முக்கிய சீடர் From Wikipedia, the free encyclopedia

காத்தியாயனர்
Remove ads

காத்தியாயனர் (Kātyāyana) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஒருவர். இவரது பெயர் பல்வேறாக சமசுகிருதம், பாளீ, தாய், சிங்கள, மொழிகளில் குறிக்கப்பட்டுள்ளது. பாலி மொழியில் கச்சாயனர் அல்லது மகா கச்சாயனர் என குறிக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் காத்தியாயன மகாதேரர், சுய தரவுகள் ...
Thumb
தாய்லாந்து பௌத்த மரபுப் படியான காத்தியானரின் சிலை

[1]

திரிடவச்சா - சண்டிமா இணையருக்கு உச்சையினி நகரத்தில் பிறந்த காத்தியாயனர், குரு அசிதரின் குருகுலத்தில் வேத சாத்திரங்களைப் பயின்றவர். பின்னர் புத்தர் ஞானம் அடைந்த பின் அவரின் நெருங்கிய தோழராகவும், சீடராகவும் இருந்தவர்.

அவந்திதேசம், உஜ்ஜைன், மாளவம் போன்ற மத்திய இந்தியப் பகுதி மக்களை பௌத்த சமயத்திற்கு மாற்றியவர். தாமரை சூத்திரம் (Lotus Sutra) அத்தியாயம் 6-இல் காத்தியாயனர், சாரிபுத்திரர், மகாகாசியபர், சுபூதி, ஆனந்தர், உபாலி, நந்தன், மௌத்கல்யாயனர் ஆகிய சீடர்களுக்கு புத்தர் தர்மம் குறித்து அருளிச் செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் விகாரையில் பௌத்த மரபுப் படியான காத்தியானரின் சிலை உள்ளது.

Remove ads

ஆதார நூற்பட்டியல்

  • Chandra, Lokesh (2002). Dictionary of Buddhist Iconography. Biblia Impex India. pp. 1652–1653. ISBN 81-7742-049-6.
  • Keown, Damien (2003). A Dictionary of Buddhism. Oxford University Press. p. 140. ISBN 0-19-860560-9.


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads