காந்தார தேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தாரதேசம் காசுமீரதேசத்திற்கு மேற்கிலும்,கிராததேசத்திற்கு வடகிழக்கிலும், மத்ரதேசத்திற்கு வடமேற்கிலும் அகன்ற பூமியாய் பரவி இருந்த தேசம்.[1] இந்நாடு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். மகாபாரதம் இதிகாசத்தில் காணப்படும் கதை மாந்தர்களான காந்தாரி, சகுனி, உல்லூகன் ஆகியோர் காந்தார நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இருப்பிடம்
பரத கண்டத்தில் வடமேற்கில் இருந்த தேசத்தின் தெற்குபாகத்தில் பதினாறில் ஒரு பாகம்தான் பூமியாகவும், எஞ்சிய பூமி கற்பாறைகளும், அடர்ந்த காடுகளாகவும் இருக்கும்.[2]
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்தின் மேற்கு எல்லை முழுவதும் மகாமலையின் தொடர் குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இத்தேசத்தின் காடுகளில் நரி, சமரி(சாமரை), கரடி, பூனை, புலி, கீரி, பாம்பு முதலிய காட்டு விலங்குகளும், காட்டு மரங்களும் அதிகம் உண்டு.
நதிகள்
இந்த காந்தாரதேசத்திற்கு மகாமலைத் தொடரிலிருந்து சிறு, சிறு ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு முகமாய் ஓடி இந்த தேசத்தை செழிக்க வைத்து பின் தெற்குமுகமாய் ஓடும் சிந்து நதியுடன் இணைகிறது.
இதனையும் காண்க
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads