காம தேவன்

From Wikipedia, the free encyclopedia

காம தேவன்
Remove ads

காம தேவன் (Kamadeva அல்லது Manmatha) என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள் ஆவார். இவருக்கு ராகவிருந்தன், அனங்கன், கந்தர்வன், மன்மதன், மனோசித், ரதிகந்தன்', மதனன், புஷ்பவனன், மாறன் புஷ்பதானுவன், வசந்தன் போன்ற பிற பெயர்களும் உண்டு.

விரைவான உண்மைகள் காம தேவன், அதிபதி ...

காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. ரதி தேவி காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.

Remove ads

தோற்றம்

Thumb
திருக்குறுங்குடி கோவிலிலுள்ள மன்மதன் சிற்பம்

புராணங்களில் படி, காம தேவன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன் ஆவார். சில புராணங்களில் இவர் திருமாலின் மகனாகவும் கருதப்படுகிறார். திருமால் கண்ணனாக அவதரித்த போது, காம தேவன் கண்ணன் - ருக்மினியின் மகன் பிரதுயும்னனாக அவதரித்தார். இவரை பிரம்மாவின் தம்பி என்று கூட கூறுகிறார்கள்.[1]

புராணக் கதைகள்

காமத்தகனம்

Thumb
தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமஅன்பு எய்தும் காமன்

காம தேவன் சிவனால் எரிக்கப்பட்ட கதை மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அக்கதை பின் வருமாறு.

கைலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சிவபெருமான் பார்வதியை மணக்க வேண்டி, காம தேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைக்கொண்டு காம தேவனை எரித்து விடுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட ரதிதேவி சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள். காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார். பின்னர், திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது, காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும், அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார்.

Remove ads

காயத்திரி மந்திரம்

காம தேவனுக்குரிய காயத்ரி மந்திரம் கீழ்க்கண்டவாறு

காமதேவாய விதுமகே புட்பதேவாய தீமகி
தன்னோ அனங்கப் பரஞ்சோதியது

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads