காரணவர்
தெனிந்திய பட்டப் பெயர், செல்லப் பெயர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரணவர் அல்லது காரணவன் அல்லது கரணவ (Karanavar or Karanavan or Karanava), என்பவர் மலையாளி, துளு, குடகு, நாஞ்சில் நாட்டு[1] சமூகத்தில் குடும்பத் தலைவரான ஆணைக் குறிக்க அல்லது ஒரு பட்டமாகப் பயன்படுத்தப்படுகிறது.
காரணவர் என்பது கேரளத்தின் செங்கனூர், புத்தனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில உயர்குடி நாயர் குடும்பங்களில் வழங்கப்படும் பட்டப்பெயராகும். இந்தக் குடும்பங்கள் அனைத்தும் புத்தனூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் கிளைகளாகும்.
இந்தப் பட்டம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர்வால் வழங்கப்பட்டதாக செவிவழிக்கதை நிலவுகிறது. அவர் புதிதாக உருவாக்கிய திருவிதாங்கூர் இராச்சியத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, மருமகன் ராம வர்மாவும் (பின்னர் தர்ம ராஜா), மார்த்தாண்ட வர்மரின் சகோதரியும் வட்டபரம்பில் வலியதன் பாதுகாப்பின் கீழ் ஒரு பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சக்தி வாய்ந்த நாயர் பிரபுக்கள், வேணாட்டின் எட்டுவீட்டில் பிள்ளைமார் போன்றோரால் தாக்கப்பட்டனர். அதில் மார்த்தாண்ட வர்மரின் மைத்துனரும் பிற போராளிகளும் உயிரிழந்தனர். மன்னரின் சகோதரி, அட்டிங்கல் ராணியும், அவரது மகனும் தப்பித்து வயல்கள் வழியாக ஓடினர். அப்போது ("புத்தனூர் பாதம்"), அங்கு அவர்கள் வயலில் வேளாண் பணிகளைச் செய்து கொண்டிருந்த ஒரு உயர்குடி நாயர் குடும்பத்தை எதிர்கொண்டனர். அவர்கள் அந்த மனிதரை "காரணவர்" என்று அழைத்து உவி கேட்டனர். அவர் அவர்களை எட்டுவீட்டில் நாயர்களிடமிருந்து காப்பாற்றி தன் தரவாட்டில் மறைத்து வைத்து, அவர்களைப் பாதுகாத்து, அருகிலிருந்த அரசனின் கூட்டாளியான ஆறுவீட்டில் மாடம்பிமாருக்குத் தகவல் தெரிவித்தார். மார்த்தாண்ட வர்மாவின் கூட்டாளியாக இருந்த வஞ்சிப்புழ தம்புரான் என்று அழைக்கப்படும் வக்கவஞ்சிப்புழா மத்தோமுக்கு அவர் தகவல் தெரிவித்தார். பின்னர் மார்த்தாண்ட வர்மர் தங்களுக்கு உதவிய அந்த நாயருக்கு செல்வத்தையும், அவர் மகாராஜாவானபோது "காரணவர்" என்ற பரம்பரைப் பெயரையும் வழங்கினார்.
Remove ads
கேரளம்
தாய்வழிக் கூட்டுக் குடும்பங்களின் தலைவராக இருக்கும் மூத்த தாய்மாமன் அல்லது தறவாடு காரணவர் என்று அழைக்கப்பட்டார். ஒரு குடும்பத்தில் காரணவரின் அதிகாரம் ஐயத்திற்கு அப்பாற்பட்டது. மருமகத்தாய அமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகும், இந்தச் சொல் அதிகாரம் மற்றும் வயதானவரைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா அவர்கள் அட்டிங்கல் ராணியைக் காப்பாற்றியதால் ஒரு உயர்குடி நாயர் குடும்பத்திற்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது.
'காரணவர்' என்ற மரியாதைக்குரிய பெயரானது பகவதி கோயில்களின் தலைவருக்குப் பயன்படுத்தப்படுகிறது. பழைய காலத்தில், ' கோயில் தம்புரான் (அ நம்பூதிரி ஆட்சியாளர்) அவரை பரிந்துரைப்பார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads