நம்பூதிரி

From Wikipedia, the free encyclopedia

நம்பூதிரி
Remove ads

நம்பூதிரி (Nambudiri) அல்லது நம்போதிரிகள் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் பரவலாகக் காணப்படும் ஓர் மலையாள பிராமண சாதியாகும். பாரம்பரிய நிலப்பிரபுத்துவ உயரடுக்காக, 1957-இல் தொடங்கும் கேரள நில சீர்திருத்தங்கள் வரை மலபார் பகுதியில் நிலத்தின் பெரும்பகுதியை இவர்கள் வைத்திருந்தனர்.[1] வேத சடங்கு, மரபுவழி பாரம்பரியத்தை கடைபிடிப்பது போன்ற தனித்துவமான நடைமுறைகளுக்கு இவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2] மதம், அரசியல், சமூகம், பொருளாதாரம், கேரளக் கலாச்சாரம் போன்ற எல்லா விஷயங்களிலும் இவர்களின் ஆதிக்கம் காணப்பட்டதென வரலாற்றுப் பேராசிரியரான சிரியாக் புல்லபில்லி குறிப்பிடுகிறார்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Thumb
பாரம்பரியமான நம்பூதிரியை சித்தரிக்கும் 1883 வரைபடம்
Remove ads

வரலாறு

Thumb
நம்பூதிரிகளின் கேரள குடியேற்றத்தை பரசுராமரால் இப்பகுதி உருவானதுடன் தொடர்புபடுத்துகின்றனர்.

இவர்கள் திராவிடப் பிராமணர்களில் மலையாளம் பேசும் வகையினர் என்று கூறப்படுகிறது.[3] பண்டைய புராணங்களின்படி பரசுராமரின் ஆணைப்படி நம்பூதிரி அந்தணர்கள் நர்மதை ஆறு, காவேரி ஆறு, மற்றும் கிருஷ்ணா ஆறு ஓடும் பகுதிகளிலிருந்து கேரளாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்.[4] இந்த புராணத்தின் படி, பரசுராமர் தனது கோடரியை கடலில் எறிந்தபோது இப்பகுதி உருவாக்கப்பட்டது.[5] கேரளாவின் இன்றைய பகுதி ஒரு காலத்தில் சேர வம்சத்தால் ஆளப்பட்டது என்பது தெரிந்திருந்தாலும், அதன் ஆரம்பகால இனவியல் குறித்து சிறிய தகவல்கள் உள்ளன.[6] தமிழ் நாட்டில் பிராமண இருப்பு சங்க காலம் முதல் சான்றளிக்கப்படுகிறது. நம்பூதிரிகள் முன்குடுமி வைத்துள்ளா பர்வாசிக் பிராமணர்கள் என்ற உண்மையின் அடிப்படையில், இவர்களின் சந்ததியினர், களப்பிரர் காலத்தில் போது மலபார் பகுதியின் மேற்கு நோக்கி நகர்ந்தனர். என டி. பி. மகாதேவன் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.[7][8] இது பிற்கால அபராசிகா பிராமணரிடமிருந்து (பின்குடுமி) தென்னிந்தியாவுக்கு குடியேறிய தமிழ் ஐயர்கள் போன்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்துகிறது. வரலாற்றாசிரியர் டி. பி. மகாதேவனின் கூற்றுப்படி, நம்பூதிரிகள் மகாபாரதத்தின் ஆரம்பகால மறுசீரமைப்பை அவர்களுடன் கொண்டு வந்தனர். இது காவியத்தின் மலையாள மொழி பதிப்பின் அடிப்படையாக அமைந்தது.[9][10]

மானுடவியலாளர்கள் ஹெய்க் மோஸர், பால் யங்கர் போன்றவர்கள், நம்பூதிரி பிராமண இருப்பை 9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தி குறிப்பிடுகின்றனர். ஆளும் அரச குடும்பங்கள் இவர்களுக்கு வழங்கிய நிலங்களின் மானியங்களால் சான்றளிக்கப்பட்டது. வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பரின் கூற்றுப்படி, உள்ளூர் மன்னர்களும் தலைவர்களும் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட நில மானியங்களை வழங்குவதன் மூலம் இவர்களை இப்பகுதிக்கு செல்ல ஊக்குவிக்கப்பட்டனர்.[11] வேதப் பள்ளிகள் இராணுவக் கல்விக்கூடங்களாக மாற்றப்பட்டபோது சோழர்களுக்கும், சேர வம்சங்களுக்கும் இடையிலான போர்களின் போது ஆட்சியாளர்களுக்கு உதவுவதன் மூலம் இவர்கள் நிலத்தைப் பெற்றனர். மேலும்,பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வாழ்விலும் தங்கள் செல்வாக்கை மேம்படுத்தினர்.[12]

Remove ads

ஆரம்பகால வரலாறு

ஜென்மி முறையின் கீழ் விவசாய நிலங்களின் மேல் இவர்களின் உரிமை பல நூற்றாண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது..மோஸர் மற்றும் யங்கரின் கூற்றுப்படி, "நில உரிமையாளர் கோயில்களை நிறுவி, சாதி விதிகளை மக்களுக்கு கற்பித்தனர்". நம்பூதிரிகள் பிராமணரின் சமசுகிருதத்தையும் உள்ளூர் தமிழ் மொழியையும் கலப்பதன் காரணமாக, அடிப்படையில் ஒரு திராவிட மொழியான மலையாளத்தின் மீதான சமசுகிருத செல்வாக்குக்கு நம்பூதிரிகள்தான் காரணம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.[13]

இடைக்கால கேரளா ஒரு சிறிய மக்கள் குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து கோயில்களுக்கும், அவற்றின் துணை கிராமங்களுக்கும் சொந்தமான நம்பூதிரிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.[14] சம்பந்தம் நடைமுறையின் மூலம் நம்பூதிரிகள் ஆளும் வர்க்கத்துடன் செல்வாக்கு செலுத்தினர். அங்கு இளைய நம்பூதிரிகள் சத்திரிய பெண்கள் அல்லது நாயர் சாதியின் உயர் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுடன் உறவு கொண்டிருந்தனர்.[15] இத்தகைய உறவு மூலம் பிறக்கும் குழந்தைகள் நம்பூதிரிகளாக கருதப்படவில்லை. ஆனால் அவர்களின் திருமண வம்சாவளியின் ஒரு பகுதியாகும்.[14] இத்தகைய உறவின் விளைவாக, கேரளாவில் பல மன்னர்களும் ஆளும் தலைவர்களும் நம்பூதிரி தந்தைகளின் சந்ததிகளாக இருப்பார்கள். இந்த ஏற்பாடுகள் நம்பூதிரிகளுக்கு மத மற்றும் கலாச்சார ஆதிக்கத்திற்கு கூடுதலாக அரசியல் அதிகாரத்தைப் பெற அனுமதித்தன.[14]

நிலத்தில் மீது நம்பூதிரிகளின் பிடி கடுமையாக முதல் குழத்தைக்கும், தந்தைவழி உறவு முறையின் மூலம் பராமரிக்கப்பட்டது. இவர்களின் இளைய உறுப்பினர்கள் நாயர்களுடன் உறவு கொண்டிருந்தாலும், இவர்களின் திருமண மரபுகள் தாய்வழி உறவு முறையாக இருந்தன. பெரும்பாலும், நம்பூதிரி குடும்பங்கள் பொது சமுதாயத்திலிருந்து ஒதுங்கியே இருந்தன.[16] வரலாற்றாசிரியர் ஈ.கே.பிள்ளை 1100களில் இருந்த நம்பூதிரிகள் இப்பகுதியில் முந்தைய ஆணாதிக்க சமூகங்கள் மீது தாய்வழி உறவு முறையில் பலகணவர் மணத்தை அமல்படுத்தியதாகக் கூறினாலும், சமூகவியலாளர் இராண்டால் காலின்ஸ் அத்தகைய மாற்றம் சுமத்தப்படுவது சாத்தியமில்லை என்று கருதுகிறார்.[11]

Remove ads

நவீன வரலாறு

பரந்த சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நம்பூதிரிகள் மாறுவதில் உள்ள விருப்பமின்மை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் வரை நீடித்தது. ஆனால் சூசன் பேய்லி என்ற வரலாற்று மானுடவியலாளர் இவர்களின் முக்கியத்துவத்தின் வீழ்ச்சியை 1729-1748 காலப்பகுதியில் மார்த்தாண்ட வர்மர் திருவிதாங்கூர் இராச்சியத்தை நிறுவிய காலத்திற்குள் காணலாம் என்று நம்புகிறார். மேலும் இவர், தனது அரச சேவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசஸ்த் பிராமணர்களை பயன்படுத்தத் தேர்வு செய்தார்.

இந்த முடிவு நம்பூதிரி பிராமணர்களுக்கும் பிராந்தியத்தில் அரச குடும்பத்திற்கும் இடையிலான உறவை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது என்று சூசன் நம்புகிறார். மற்றவர்கள் மார்த்தாண்ட வர்மாவின் செல்வாக்கு குறுகிய காலமே இருந்தது என்றும், மாற்றத்தின் முக்கிய காரணம் 1800களின் முற்பகுதியில் இருந்து பிரித்தானிய காலனித்துவ நிர்வாகிகளான கொலின் மக்காலே, ஜான் மன்ரோ ஆகியோரின் வருகையாகும் என்றும் கூறியுள்ளனர். பிரித்தன் பாராளுமன்றத்தில் 1833, 1853 ஆம் ஆண்டு சாசனச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரித்தன் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் பணிகளை ஊக்குவித்தது. குறிப்பாக கல்வி வழங்குவதில், மற்றும் நில உரிமையாளர்கள், பரம்பரை நம்பூதிரிகளும், நாயர்களும் ஆகிய இருவரின் பழக்கவழக்கங்கள், திருமண ஏற்பாடுகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் நீதித்துறை முறையை அறிமுகப்படுத்தத் தொடங்கியது. இந்த மாற்றங்களும், மேலும் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்களாலும், இவர்களின் பாரம்பரியமான வாழ்க்கை அடிப்படையானது சவால் செய்யப்பட்டது. இது இப்பகுதியின் பிற முக்கிய இனங்களான ஈழவர்களையும் சிரிய கிறித்துவர்களையும் பாதித்தது.[16]

மத பழக்கவழக்கங்கள்

Thumb
ஒரு நம்பூதிரி பிராமணர் வேதச் சடங்குகளை செய்கிறார்

வேதங்களைக் கற்றல்

இவற்றில் பின்வரும் வேத மறுசீரமைப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.[17]

  1. இருக்கு வேதம்: இந்தியா முழுவதற்கும் ஒரே ஒரு மறுசீரமைப்பு ஆகும். நம்பூதிரிகள் ஆசுவலாயன சூத்திரத்தையும், கல்ப சூத்திரத்தையும் பின்பற்றுகிறார்கள். நம்பூதிரிகளிடையே கௌசுடாக்கி பாரம்பரியம் என்று அழைக்கப்படும் பிந்தையது அவர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  2. யசுர் வேதம் பௌதயனா, வதுலா மற்றும் அக்னிவேசிய வேத சூத்திரங்களுடன் கூடிய தைத்திரியச் சடங்குகள் நடத்தப்பட்டது.
  3. சாம வேதம் ஜைமினிய மறுசீரமைப்பில் சில இடங்களில் சியா பிராமணர்களிடையே மட்டுமே காணப்படுகிறது.

அக்னிகாயனம்

அக்னிகாயனாவின் (நெருப்பின் பலிபீடம்) பண்டைய வேத சடங்கு, இது 12 நாள் காலப்பகுதியைக் கொண்டுள்ளது. பெடரிக்கு இசுட்டால், இராபர்ட் கார்ட்னர் ஆகியோர் இதை பழமையான சடங்குகளில் ஒன்று என்று கூறுகின்றனர். இச்சடங்கு நம்பூதிரி பிராமணர்களால் குறைந்தபட்சம் 1975 வரை பராமரிக்கப்பட்டது. இது பெரும்பாலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதிருக்கலாம், மாற்றத்திற்கான சமூகத்தின் எதிர்ப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.[18] இது ஆந்திராவில் தொடர்ந்து செய்யப்படுகிறது எனவும், மேலும் பல நூற்றாண்டுகளாக உள்ளது என்றும் டேவிட் நைப் என்பவர் குறிப்பிடுகிறார்.[19]

Remove ads

உள்ளூர் கலாச்சாரம்

உடை

பாரம்பரியமாக, இவர்கள் உள்ளூரில், தோத்தி (அல்லது தோர்த்துமுண்டு) என்று அழைக்கப்படும் இடுப்பைச் சுற்றி ஒரு எளிய துணியை அணிந்தார்கள். இவர்கள் பயணிக்க வேண்டியிருந்தபோது, இரண்டு துணிகளை உடன் எடுத்துச் சென்றனர்.

நம்புதிரிகள் தமிழ்நாட்டின் தீட்சிதர்களைப் போல முன்பக்கத்தில் தங்கள் பாரம்பரிய தலைமுடியை முன்குடுமியாக வைத்திருந்தனர்.[20][21]

திருமணப் பழக்க வழக்கங்கள்

நம்பூதிரி பிராமணக் குடும்பங்கள் இந்தியாவில் பிற இடங்களில் உள்ள பிராமண சமூகங்களை விட பலகணவர் திருமணத்தை மிகவும் கடுமையாகக் கடைப்பிடித்தன. இந்த வழக்கத்தின் கீழ், மூத்த மகன் மட்டுமே நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும். இதனால் குடும்ப சொத்துக்கு ஒரு வாரிசை உருவாக்க முடியும். இளைய மகன்கள் பிராமணரல்லாத பெண்களுடனான சம்பந்தம் உறவுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டனர். இவர்களை நம்புதிரிகள் தங்களின் ஆசை நாயகிகளாகக் கருதினர். இவர்களின் சந்ததியினருக்கு மரபுரிமை இல்லை.[22]

கூடியாட்டம்

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட கூடியாட்டம் என்று அழைக்கப்படும் சமசுகிருத நாடக வடிவம் பாரம்பரியமாக நம்பூதிரிகளால் ஆதரிக்கப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads