காரென் மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரென் (Karen) அல்லது காயின் (Kayin) மக்கள் (காரென்: Pwa Ka Nyaw Poe, Kanyaw), என்பவர்கள் சீன-திபெத்திய மொழிகள் பேசும் இனத்தவர்கள். இவர்கள் முக்கியமாக பர்மாவின் (மியான்மர்) தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்றனர். பர்மாவின் மொத்தமாக உள்ள 50 மில்லியன் மக்களில் காரென் இனத்தவர்கள் கிட்டத்தட்ட 7 விழுக்காட்டினர் ஆவர்[1]. காரென் மக்களில் பலர் தாய்லாந்தில், குறிப்பாக பர்மிய-தாய் எல்லைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.
காரென் மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருந்தாலும், இவர்களின் மூதாதையர் கோபி பாலைவனத்தூடாகக் கடந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது[2].
காரென் மக்களின் அரசியல் அமைப்பான காரென் தேசிய ஒன்றியம் 1949 ஆம் ஆண்டில் இருந்து நடுவண் அரசுடன் போரிட்டு வருகிறது. காரென் தேசிய ஒன்றியம் ஆரம்பத்தில் தனிநாடு கோரிப் போராடியது. ஆனாலும், 1976 ஆம் ஆண்டில் இருந்து தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு கூட்டாட்சி கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
- பர்மாவில் காரென் மாநிலம்
- 19ம் நூற்றாண்டு ஓலைச்சுவடி
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads