காரைக்கால் கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரைக்கால் கடற்கரை காரைக்கால் நகரின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை ஆகும். இக்கடற்கரை வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. காரைக்கால் கடற்கரை தென்கிழக்கு தமிழகப் பகுதிகளில் உள்ள சிறந்த இயற்கை கடற்கரைகளில் ஒன்றாகும்.[1] கடற்கரைக்கு அருகில் அரசலாற்றின் முகத்துவாரம் அமைந்துள்ளது. காரைக்கால் கடற்கரை இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்டது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, நீரூற்றுக்கள், குழந்தைகள் பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் டென்னிஸ் அரங்கம் ஆகியவை இப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன.[2] இதன் காரணமாக காரைக்கால் கடற்கரை இப்போது ஒவ்வொரு நாளும் அதிகளவிலான மக்கள் கூட்டத்தை ஈர்க்கிறது.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads