கார்டியன்சு ஒப் த கலக்சி (வரைகதை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்டியன்சு ஒப் த கலக்சி அல்லது கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (ஆங்கிலம்: Guardians of the Galaxy) என்பது மார்வெல் வரைகதை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் அணி ஆகும். இந்த அணியை ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு எழுத்தாளர், பதிப்பாசிரியர் டான் அப்நெட் மற்றும் ஆண்டி லானிங் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
இந்த அணியில் இசுடார் லோர்டு, காமோரா, குரூட், பைலா வெல், ஆடம் வார்லாக், டிராக்சு தி டெஸ்ட்ராயர், ராக்கெட் ரக்கூன் போன்றோர் இருந்தனர். இது முதலில் ஏப்ரல் 2008 ஆம் ஆண்டில் 'அண்ணிகிளாடின்: காணியூஸ்ட்' #6 என்ற கதையில் தோன்றியது.[1][2][3] இந்த அணியை அடிப்படையாகக் கொண்ட கார்டியன்சு ஒப் த கலக்சி என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[4][5] அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு கார்டியன்சு ஒப் த கலக்சி 2 என்ற படம் வெளியானது. மேலும் இந்த அணி அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) ஆகிய படங்களிலும் இடம் பெற்றுள்ளது. மேலும் 2022 இல் வரவுள்ள தோர்: லவ் அண்ட் தண்டர் என்ற படத்திலும் இடம் பெற்றுள்ளது. இது 1969 ஆம் ஆண்டில் ஆர்னால்ட் டிரேக், ராய் தாமஸ் மற்றும் ஸ்டான் லீ ஆகியோரால் உருவாக்கப்பட்ட அசல் அணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads