கார்த்திக் (பாடகர்)

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia

கார்த்திக் (பாடகர்)
Remove ads

கார்த்திக் (பிறப்பு 7 நவம்பர் 1980) சென்னையைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்படப் பாடகர். துவக்கத்தில் துணைப்பாடகராக ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த வந்த கார்த்திக் பின்னர் அவர் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடத் தொடங்கினார். பின்னர் பல இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகராக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார்.[1] பாய்ஸ் படத்தில் அவர் பாடிய "எனக்கொரு கெர்ல்பிரண்ட் வேணுமடா" என்ற பாடலும் கஜினியில் "ஒரு மாலை" பாடலும் பெருவெற்றி கண்டன. தெலுங்கு திரையுலகிலும் கொத்தபங்காரு லோகம் மற்றும் ஹாப்பிடேஸ் படங்களில் அவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.வாரணம் ஆயிரம் படத்தில் அவர் கானா வகையில் பாடிய "அவ என்ன" என்ற பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தி மொழிமாற்றம் செய்து வெளியான கஜினி படத்தில் அவர் பாடிய "பெக்கா" பாடல் மூலம் உலகளவில் அறியப்பட்டார்.

விரைவான உண்மைகள் கார்த்திக், பின்னணித் தகவல்கள் ...
Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads