கார்த்திஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்தேஜ் அல்லது கார்த்திஜ் (Carthage), என்பது பண்டைய கிரேக்க நகரங்களில் ஒன்றாகும். இது போரினால் அழிந்துபோன பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந் நகரம் கானானிய போனீசிய காலனியாக இருந்து பின்னர், கிமு முதல் புத்தாயிரம் காலத்தில் தென்மேற்கு மத்தியதரைக்கடற்பகுதியில் கோலாச்சிய புயூனிக் பேரரசின் தலைநகராக விளங்கியது.[1]
Remove ads
அமைவிடம்
ஆப்பிரிக்காக் கண்டத்தின் வடக்கில் அமைந்த துனிசியா நாட்டின் வடக்கு கடற்கரையில் கார்தேஜ் நகரம் இருந்தது.
வரலாறு
சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நகரம் கார்த்தேஜ். மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரையில் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய ஃபினீஷிய மக்களே இந்த நகரத்தை அமைத்தனர். இவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள். போர்க் கப்பல்களுக்கு ஒன்றும், வாணிகக் கப்பல்களுக்கு ஒன்றுமாக இரு துறைமுகங்களை இங்கு கட்டினார்கள். கப்பல் போக்குவரத்துக்கு மையமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்நகரம் விரைவாக வளர்ச்சி அடைந்தது. பிறகு ரோமானியர்கள் இந்நகரைக் கைப்பற்றி அழித்தனர்.[2][3]கி.மு.29-ல் அகஸ்ட்டஸ் மன்னரால் மீண்டும் நிறுவப்பட்டு ரோம் சாம்ராஜ்யத்தின் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தது. ஆனால் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாண்டல்கள் என்போர் இந்நகரைக் கைப்பற்றினர். இறுதியாக கி.பி 7-ம் நூற்றாண்டில் அராபியர்கள் இந்நகரை அடியோடு அழித்துவிட்டனர். இன்று கல்லறைகளும் சிதைவுகளுமே இங்கு காணப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads