உலக பாரம்பரியக் குழு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலக பாரம்பரியக் குழு (World Heritage Committee) என்பது உலகின் பல பாகங்களிலும் காணப்படும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் எவை எனத் தீர்மானிப்பதற்கும், அவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கும், உலக பாரம்பரிய மரபொழுங்குகளைச் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும் ஒரு குழுவாகும். 21 நாட்டு உறுப்பினர்களைக்[1] கொண்ட இக்குழு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.[2]

உலக பாரம்பரிய மரபொழுங்கின்படி குழுவின் உறுப்பினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு தமது பணியில் இருக்கலாம். ஆயினும், பல நாடுகளும் தமது நாட்டின் குழு உறுப்பினரை நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தாமாகவே விலக்கிக் கொன்டு, ஏனைய நாடுகளுக்கு உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கி வருகின்றன.[2]. 2005 ஆம் ஆண்டு, 15 ஆவது பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட, இக்குழுவிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது ஆறு ஆண்டு பணிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைத்துக் கொள்ள முடிவு செய்தனர்[2].
Remove ads
பொறுப்புகள்
இக்குழுவின் பொறுப்புகள்
- பாரம்பரிய களங்கள் தொடர்பான மரபொழுங்குகள் கடைபிடிக்கப்படுவதைக் கவனித்துக் கொள்ளுதல்
- மரபொழுங்குகள் தொடர்பான நடைமுறைகளை செயல்படுத்துதல்
- உலக பாரம்பரிய நிதியத்தின் பயன்பாட்டை வரையறுத்தல்
- ஒரு நாடானது தனது எல்லைக்குட்பட்ட பாரம்பரியக் களத்தைப் பாதுகாக்க நிதி உதவி கோரும்பொழுது, அதனை உலக பாரம்பரிய நிதியத்திலிருந்து வழங்குதல்
அமர்வுகள்
உலகப் பாரம்பரியக் குழு, ஏற்கனவே உள்ள பாரம்பரியக் களங்களின் மேலாண்மை குறித்தும் நாடுகளிலிருந்து பெறப்பட்ட புதியக் களங்களுக்கான பரிந்துரைகளை ஏற்பது குறித்தும் கலந்துரையாட ஆண்டுக்கொருமுறை கூடுகிறது.[2]
Remove ads
உறுப்பினர்கள்
2016ல் துருக்கியில் நடைபெற உள்ள 40ம் ஆண்டுக் கூட்டத்தில் பங்குபெறும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் குழு உறுப்பினர்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads