கார்பன் மூவாக்சைடு

From Wikipedia, the free encyclopedia

கார்பன் மூவாக்சைடு
Remove ads

கார்பன் மூவாக்சைடு (Carbon trioxide) என்பது CO3 என்ற மூலக்கூறு வாய்பாட்டுடன் கூடிய கார்பனின் ஆக்சோகார்பன் வகை ஆக்சைடு ஆகும். நிலைப்புத்தன்மை அற்ற இச்சேர்மம் மூன்று வகையான மூலக்கூறுச்சீர்மை ,Cs, D3h, மற்றும் C2v புள்ளித் தொகுதி மாற்று வடிவங்களில் இருக்க வாய்ப்புள்ளதாக பெரும்பாலான கோட்பாட்டு முறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடிப்படைநிலை மூலக்கூறு நிலையில் இக்கூற்று வெளிப்படுகிறது[1][2] .

Thumb
கார்பன் மூவாக்சைடின் Cs, D3h, மற்றும் C2v மாற்று வடிவங்கள்

நிலைப்புத்தன்மை மிக்கதான கார்பனேட்டு அயனியும் (CO32−) கார்பன் மூவாக்சைடும் (CO3) வேறுபட்டவை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

கார்பன் மூவாக்சைடை உற்பத்தி செய்யமுடியும். உதாரணமாக, மின்மக் கலவையில்[3] உள்ள கட்டில்லா எலக்ட்ரான்களில் இருந்து உருவாகும் மூலக்கூறு ஆக்சிசன் உண்டாக்கும் , கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் அணு ஆக்சிசன் வினையில் எதிர் அயனியாக்க மின்னிறக்க நகர்வுப் பகுதியில் இது தோன்றுகிறது.

திரவ கார்பன்-டை-ஆக்சைடு அல்லது CO2/SF6 கலவையில் கரைந்திருக்கும் ஓசோன் -45 ° செல்சியசு வெப்பநிலையில் 2537Å அளவுள்ள ஒளியின் கதிர்வீச்சுக்கு உட்பட்டு ஒளியாற்பகுப்பு அடையும்போதும் கார்பன் மூவாக்சைடு உருவாகும் மற்றொரு முறையும் அறியப்பட்டுள்ளது. ஊகிக்கமுடிகின்ற இம்முறையில் தோன்றும் கார்பன் மூவாக்சைடு தன்னிச்சையாக 2CO3 → 2CO2 + O2 என்ற வினைவழியாக சிதைவடைவதாகவும் தெரிகிறது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஆயுட்காலமே இவ்வினை நீடிக்கிறது[4].

உலர் பனிக்கட்டி என்றழைக்கப்படும் திட கார்பன்-டை- ஆக்சைடு மீது ஓசோன் வாயுவை ஊதும்போதும் கார்பன் ஓராக்சைடும் மூலக்கூறு ஆக்சிசனும் வினைபுரியும் போதும்கூட கார்பன் மூவாக்சைடு உருவாகிறது.

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads