காலச்சக்கர மூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காலசக்கர மூர்த்தி திபெத்திய பௌத்ததில் வண்ங்கப்படும் ஒரு யிதம் ஆவார். காலசக்கர மூர்த்தி காலசக்கரத்தின் உருவகமாக வணங்கப்படுபவர். அனைத்தும் காலத்துக்கு உட்பட்டு உள்ளதால் காலசக்கரர் அனைத்தும் அறிந்தவராக கருதப்படுகிறார். இவருடைய துணை காலசக்கரி அல்லது கலிசக்கரா என அழைக்கப்படுகிறார். காலசக்கரி காலத்தை கடந்தவராக கருதப்படுகிறார்.

தோற்றம்
பௌத்த புராணங்களின்படி, சம்பால இராஜ்ஜியத்தின் அரசர் ஸுசந்திரர் புத்தரிடம் உலக இன்பத்தை விடுக்காமல் எவ்வாறு தர்மத்தை பின்பற்றுவது என்பதை உபதேசிக்குமாறு கூறினார். இதை ஏற்றுக்கொண்ட புத்தர் ஒரே நேரத்தில் இரு இடங்களில் காட்சி அளிக்கலானார். ஒரு இடத்தில் பிரக்ஞபராமித சூத்திரத்தையும், இன்னொரு இடத்தில் காலசக்கர மூர்த்தியாய் தோன்றி அரசர் ஸுசந்திரருக்கு காலச்சக்கர தந்திரத்தை உபதேசித்ததாக கூறப்படுகிறது.
Remove ads
மந்திரம்
இவருடைய மந்திரம்
ஓம் ஆ: ஹூம் ஹோ: ஹம் க்ஷ ம ல வ ர ய ஹூம் பட்
ॐ आः हूँ होः हं क्ष म ल व र य हूँ फट्
வெளி இணைப்புகள்
- kalachakra.org பரணிடப்பட்டது 2007-12-06 at the வந்தவழி இயந்திரம்
- காலச்சக்கர மூர்த்தி பரணிடப்பட்டது 2009-08-28 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads