யிதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஜ்ரயான பௌத்தத்தில் யிதம் அல்லது இஷ்டதேவதை(வடமொழி) என்பது தியானத்திற்கான கருப்பொருளாக ஏற்றுக்கொள்ளப்படும் முழுவதும் போதி நிலை அடைந்த ஒரு தேவதாமூர்த்தியை குறிக்கும். ஒருவர் தன்னுடைய யிதத்தை தேர்ந்தெடுத்தும் அந்த யிதத்தை நோக்கியே அவருடைய தியானம் அமைந்திருக்கும். எனவே யிதம் என்பதை தியான் மூர்த்தி என்றும் கொள்ளலாம்[1][2]
நம்பிக்கைகள்
யிதம் என்பது தியானத்தில் கருப்பொருளாக இருக்கின்ற போதி நிலை அடைந்த ஒருவரைக் குறிக்கும். ஒருவர் தன்னுடைய யிதத்துடன் தன்னை அடையாளம் கண்டுகொள்வதால் புத்த நிலையை அடைவது மிகவும் எளிதாகிறது. தன்னுடைய யிதத்தையே போதி நிலைக்கான வழிகாட்டியா கொள்கின்றனர். ஹயக்ரீவர், வஜ்ரகீலயர்,யமாந்தகர்,ஹேவஜ்ரர், சக்ரசம்வரர், வஜ்ரயோகினி,காலச்சக்கர மூர்த்தி ஆகியோர் வழக்கமாக யிதங்களாக வணங்கப்படுகின்றனர். இருப்பினும், புத்தர்களையும் போதிசத்துவர்களையும், தர்மபாலகர்களையும் கூட யிதமாக கருதி வணங்கலாம்0. அவலோகிதேஷ்வரர், தாரா, மஞ்சுஸ்ரீ, நைராத்மியை ஆகியோரும் யிதங்களாக தேர்ந்தெடுக்கபடுவதுண்டு.
யிதம் எனபது ஒருவர் எளிதாக போதி நிலை அடைவதற்காக வணகங்கப்படுபவர் ஆவார். எனவே யிதம் என்பது யித்த்தை தேர்ந்தெடுத்த்வரின் உள்ளார்ந்த போதி நிலையையும் குறிக்கக்கூடியது. ஒருவர் யிதத்தை தேர்ந்தெடுத்தவுடன், அவர் தன்னை அந்த யிதத்தின் குணங்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு யிதத்தின் அனைத்து நற்குணங்களும் தான் அடையும் வரைஅந்த யிதத்தை நோக்கி தியான செய்வார். எனவே யிதத்தை தேர்ந்தெடுக்கும் போது தன் குணத்துடன் ஒத்த குணமுள்ள யிதத்தையே தேர்ந்தெடுக்கின்றனர்.
எனவே யிதம் என்பது, ஒருவர் தன்னுடைய மனதை போதி நிலை அடைய வேண்டி பக்குவப்படுத்த உதவுவதற்காக வணங்கப்படும் ஒரு தேவதாமூர்த்தி ஆகும். தன் யிதத்துடன் அனைத்து நிலைகளிலும் ஒன்றிப்போகும் போது ஒருவருக்கு போதி நிலை கிடைக்கிறது
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads