காலம் (நூல்)

From Wikipedia, the free encyclopedia

காலம் (நூல்)
Remove ads

இந் நூலானது, புகழ் பெற்ற ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஸ்டீஃவன் ஹாக்கிங் என்பவரால் 1988இல் வெளியிடப்பட்ட "A Brief History of Time" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் விசைகளும், விரிவடையும் அண்டக் கொள்கைகள், குவாண்டம் கோட்பாடுகள் (கற்றை இயல் கோட்பாடுகள்), கருந்துளைகள், புழுத்துளைகள், காலக்கனை, அண்டத்தின் பிறப்பு, மாவெடிப்பு (Big Bang), மாநெரிப்பு (Big Crunch), இயற்பியலின் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள் முதலிய ஆழமான அறிவியல் கருத்துக்களை அனைவரும் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனை மிக நேர்த்தியாய் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் நலங்கிள்ளி மற்றும் தியாகு என்பவர்கள். இதன் பதிப்பாசிரியர் தியாகு. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா வெளியீடாக இது வெளி வந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பு நூல் 295 பக்கங்கள் கொண்டுள்ளது. இதன் ISBN எண்: 0967621224 ஆகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்A Brief History of Time, நூல் பெயர்: ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads