கால்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கால்கா (Kalka) ஹரியானா மாநிலத்தின் பாஞ்ச்குலா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். கடவுள் காளியின் பெயராலேயே இந்நகரம் கால்கா என்று அழைக்கப்படுகிறது. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இமாச்சலப்பிரதேசத்தின் நுழைவாயில் என இந்நகரை அழைக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை 22 இந்நகர் வழியாகச் செல்கிறது. மேலும் புகழ் பெற்ற கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை இங்கிருந்து சிம்லாவிற்குச் செல்கிறது.
Remove ads
வரலாறு
1843-ல் பாட்டியாலா சமஸ்தானத்திடம் இருந்து ஆங்கிலேயர் இதைக் கைப்பற்றினர். தொடர்வண்டிப்பாதையின் முக்கிய சந்திப்பாக இது இருந்தது. தொடர்வண்டிச் சேவையில் தில்லி-அம்பாலா-கால்கா மற்றும் கால்கா-சிம்லாவின் மையமாக இருந்தது. கால்கா நகராட்சி 1933-ல் உருவாக்கப்பட்டது. 1901 -ல் இதன் மக்கட்தொகை 7,045 ஆக இருந்தது. மேலும் மஞ்சள் மற்றும் இஞ்சி அங்காடிகள் கால்கா-வில் இருந்தன.[1]
காலநிலை
கால்காவின் காலநிலை அதன் அருகிலுள்ள நகரங்களான சண்டிகர், அம்பாலா , தில்லி ஆகியவற்றைவிட நன்றாகவே இருக்கும்.மே மற்றும் ஜூன் பருவமழைக்காலங்களில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் கால்காவின் காலநிலை நன்றாகவே இருக்கும். அக்டோபர்/நவம்பர் காலங்களில் குளிர்காலம் ஆரம்பிக்கும்.
போக்குவரத்து
கால்கா மலைச்சரிவில் அமைந்துள்ள நகரம். எனவே மற்ற நகரங்களோடு எளிதில் செல்லமுடியாத பாதைகளைக் கொண்டது. தனியார் மற்றும் அரசுப் பேருந்து சேவைகள் கால்கா நகரில் உள்ளன. கால்கா-சிம்லா தொடர்வண்டிச் சேவை யுனெஸ்கோ நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய தொடர்வண்டிச் சேவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய இடங்கள்
- காளி கோவில்
- ஸ்ரீபாலாஜி கோவில்
- பிஞ்சோர் தோட்டம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads