காளிபங்கான்

From Wikipedia, the free encyclopedia

காளிபங்கான்map
Remove ads

காளிபங்கான் (Kalibangān), தற்கால தார் பாலைவனத்தில் பாயும் காகர் நதியின் தென்கரையில் அமைந்த சிந்துவெளி பண்பாட்டுக் கள நகரம் ஆகும். 29.47°N 74.13°E / 29.47; 74.13 [1][2] காளிபங்கான் நகரம் ஹரப்பா 1 - 3சி இடைப்பட்டகாலத்தில் செழித்து இருந்தது.[3]

விரைவான உண்மைகள் காளி பங்கான் काली बंगा, இருப்பிடம் ...
Thumb
Ruins of Kalibanga. Brick wall can be seen in the hole in the centre.
Thumb
இடுகாட்டிற்கு செல்லும் பாதை
Thumb
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்

ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள அனுமான்காட் மாவட்டத்தில் உள்ள பிலிபங்கான் வருவாய் வட்டத்தில் அமைந்துள்ளது. பிகானேர் நகரத்திலிருந்து 205 கி.மீ. தொலைவில் காளி பங்கான் அமைந்துள்ளது.

பண்டைய திருஷ்டாவதி ஆறு மற்றும் சரசுவதி ஆறுகள் கூடுமிடத்தில் காளிபங்கானின் அமைவிடமாக கருதுகிறார்கள்.[4] சிந்து வெளி பண்பாட்டு காலத்திய காளி பங்கான் தொல்லியல் களத்தின் 34 ஆண்டு கால அகழாய்விற்குப் பின், முழு அறிக்கை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 2003ல் வெளியிட்டது.

லியுஜி பியோ தெஸ்சிதோரி எனும் இத்தாலிய இந்தியவியல் அறிஞரான லியுஜி பியோ தெஸ்சிதோரி (Luigi Pio Tessitori) என்பரால் கிபி 1887 - 1919களில் காளி பங்கான் அகழ்வாரய்ச்சி செய்யப்பட்டது.[5]

சிந்து வெளி பண்பாட்டுக் காலத்தின் போது, காளி பங்கான் நகரம், ஒரு மாகாணத்தின் தலைநகரமாக இருந்திருக்கும் என்றும் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். மேலும் காளி பங்கான் அதன் தனித்தன்மையான பலிபீடங்களாலும், உலகின் முதன்மையான சான்றளிக்கப்பட்ட உழவு நிலங்களாலும் தனித்துவமாக திகழ்கிறது.[6]

காளிபங்கான் 1 என்ற பகுதி முந்தைய ஹரப்பா பண்பாட்டு காலத்தியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[7] காளிபங்கானில் சுடுமண் எருது சிற்பம் கிடைத்துள்ளது.[8] காளிபங்கான் அகழாய்வில் சுடுமண் வளையல்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. இங்கு கிடைத்த உருளை வடிவ முத்திரைகளில் கைகளில் ஈட்டிகள் ஏந்திய ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உருவங்கள் உள்ளது

Remove ads

தற்கால காளிபங்கான்

காளிபங்கான் எனும் சொல்லிற்கு கறுப்பு வளையல்கள் எனப்பொருள்படும். காளிபங்கான் தொல்லியல் களத்திற்கு அருகில் உள்ள பிலிபங்கான் என்ற நகரியமும் தொடருந்து நிலையமும் உள்ளது. பிலிபங்கான் என்பதற்கு மஞ்சள் வளையல்கள் எனப் பொருள்.

காளிபங்கான் தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு, 1983ல், இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஒரு அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads