இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (Archaeological Survey of India), எனப்படும் அமைப்பு இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பாகும். பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கிழ் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபை காத்தல் என இரு முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டது.[1]
இந்தியாவின் தொன்மையைப் பறைசாற்றும் எல்லாவகையான சின்னங்கள், கட்டிடங்கள், இடங்கள், பொருள்கள் இவை அனைத்தையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இதன் தலையாய பணிகளாகும். இந்தியாவின் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு விதி 1958இன் கீழும், இந்திய தொல்பொருள் மற்றும் களைக்களஞ்சிய பாதுகாப்பு விதி 1972இன் கீழும் இந்திய நாட்டின் அனைத்து தொல்பொருள் ஆராய்ச்சிகளும் இவ்வமைப்பினால் முறைப்படுத்தப்படுகிறது.[2]
இவ்வமைப்பு இப்பணியை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது. இதன் கீழ் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்களும், கட்டிடக்கலை வல்லுனர்களும், அறிவியலாளர்களும் மற்றும் இதன் கீழ் இயங்கி வருகின்ற அருங்காட்சியகங்கள், வட்டங்கள், கற்கால ஆராய்ச்சித் துறை, கல்வெட்டாராய்ச்சித் துறை, விஞ்ஞானத்துறை மற்றும் கட்டிட ஆய்வுத்திட்டப்பணி, வழிபாட்டுத்தல ஆய்வுத்திட்டப்பணி ஆகியவற்றின் வழியாக பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
நொய்டாவில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் இயங்குகிறது.
Remove ads
நிர்வாகம்
வட்டங்கள்
- ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
- ஐசாவல், மிசோரம்
- அமராவதி, ஆந்திரம்
- அவுரங்காபாத், மகாராட்டிரா
- பெங்களூரு, கர்நாடகா
- போபால், மத்தியப் பிரதேசம்
- புவனேஸ்வர், ஒடிசா
- சண்டிகர்
- சென்னை, தமிழ்நாடு
- டேராடூன், உத்தராகண்டம்
- தில்லி
- தார்வாட், கர்நாடகா
- கோவா
- குவாஹாஹ்தி, அசாம்
- ஐதராபாத், தெலங்கானா
- ஜெய்ப்பூர்ம், இராஜ்ஸ்தான்
- ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்
- ஜோத்பூர், இராஜஸ்தான்
- கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- லக்னோ, உத்தரப் பிரதேசம்
- மும்பை, மகாராட்டிரா
- நாக்பூர், மகாராட்டிரா
- பாட்னா, பிகார்
- ராய்ப்பூர், சத்தீஸ்கர்
- ராய்காஞ்ச், மேற்கு வங்காளம்
- ராஞ்சி, ஜார்கண்ட்
- சாரநாத், உத்தரப் பிரதேசம்
- சிம்லா, இமாச்சல பிரதேசம்
- சிறீநகர், ஜம்மு காஷ்மீர்
- திருச்சூர், கேரளா
- வதோதரா, குஜராத்
மேற்கூறிய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி விதிகளின்படி தொல்பொருள் ஆராய்ச்சி இவ்வட்டங்களில் நடைபெறுகின்றன. ஆரய்ச்சிப்பணிகள் பின்வரும் விதங்களில் நடைபெறும்.
- கிராமங்கள்தோறும் சென்று தொல்பொருள் மீதங்கள் குற்த்து ஆய்வு நட்த்தல். ஆராய்ச்சிக்குறிய இடங்களை விரிவாய்வு செய்தல்.வீழ்விளிம்பில் இருக்கும் தொல்பொருள்களை கோப்பாக்குதல்
- ஆய்வுக்குரிய இடங்களை அகழாய்வு செய்தல்
- பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை அனுதினமும் பராமரித்து சிதைவுறாது பேனுதல்.
- நினைவுச்சின்னங்களருகே சுற்றூலா பயனிகளுக்கு அடிப்படை வசதிகளை அமைத்தல்.
- பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களிடமிருந்து 300 அடி முதல் 900 அடி வரை உள்ள மற்றும் புதியதாக அமையவுள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு அனுமதி சான்றிதழ் அளித்தல்.
- நினைவுச்சின்னங்களருகே படபிடிப்பு, புகைப்படப்பிடிப்பு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கல்.
- உலக பாரம்பரிய நாள் ஏப்ரல் 18, உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 18-25, உலக அருங்காட்சியக நாள் மே 18 மற்றும் பல முக்கிய நாட்களன்று மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்.
- தொல்பொருள்களை பதிவு செய்தல் தொன்மையின்மை சான்றிதழ் வழங்கல்
- பல்கலைக்கழகங்களோடும், ஆராய்ச்சி மையங்களோடும் ஊடாடுதல்.
தீனதயாள் தொல்லியல் பயிற்சி நிறுவனம்
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் இயகும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் இரண்டு ஆண்டு முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கிறது. கல்வெட்டியல், அருங்காட்சியகவியல், நாணவியல், தொல்பொருட்களை பராமரிப்பு போன்ற துறைகளில் இந்நிறுவ்னம் பயிற்சி அளிக்கிறது. [3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads