காஷிபாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஷிபாய் (Kashibai) முதல் பாஜிராவின் முதல் மனைவியாவார். பாஜிராவ் 5ம் மராட்டிய சத்ரபதி சாகுஜியின் தளபதியும் பேஷ்வாவும் ஆவார். காசிபாய்க்கு பாலாஜி பாஜிராவ் மற்றும் இரகுநாத் ராவோ உட்பட 4 பிள்ளைகள் உண்டு. 1740 ஆம் ஆண்டு பாஜிராவின் மரணத்தின் பின் பாலாஜி பேஷ்வா பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதேபோல் பாஜிராவின் மரணத்தின் பின்னர் பாஜிராவின் இரண்டாம் மனைவி மஸ்தானியின் புதல்வனான சம்ஷேர் பகதூரை வளர்த்து வந்தார்.[3][4]
Remove ads
குடும்பம்
இவரின் பெற்றோரின் பெயர் மகத்ஜி கிருஷ்ணா ஜோஷி மற்றும் சியுபாய் ஆகும். காஷிபாய் சாஸ் எனும் ஊரில் வங்கியாளர் குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஆவார்.[5] காஷிபாய் செல்லமாக லாடுபாய் என அழைக்கப்பட்டார். இவர் பிறந்து வளர்ந்த ஊரான சாஸ்காமன் கிராமம் புனேவிற்கு 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.
இவருடைய தந்தையின் சொந்த ஊர் இரத்னகிரியில் உள்ள இரால்சூர் ஆகும். பின்னர் இவர் சாஸ்காமனுக்கு குடிபெயர்ந்தார். இவரின் தந்தை வசதிபடைத்த வட்டிக் கடைகாரராகவும் மராட்டிய இராச்சியத்தின் கல்யான் எனுமிடத்தின் சுபேதராகவும் இருந்தார். இவ்வாறான காரணிகளே பாஜிராவையும் காஷிபாயையும் ஒன்று சேர்ப்பதற்கு பெரிதும் உதவின.[1].மகாதாஜி சிந்தியா மராட்டியப் பேரரசர் சத்ரபதி ஷாகுவிற்கு ஏற்பட்ட பல சிரமங்களின் போது உதவியிருந்தார்; இதனால் அவர் மராட்டிய பேரரசின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.[6]. மேலும் காஷிபாய்க்கு கிருஷ்ணராவோ சாஸ்கர்[7] எனும் சகோதரனும் உண்டு. வரலாற்று ஆசிரியர் பாண்டுரங் பல்கவடேயின் குறிப்பின்படி காஷிபாய் ஒரு அமைதியானவராகவும் மென்மையாக பேசக்கூடியவராகவும் மேலும் வீக்கத்தினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.[8]
Remove ads
திருமண வாழ்வு
1720ம் ஆண்டு பங்குனி மாதம் 11ம் திகதி சஸ்வத் எனும் இடத்தில் நடந்த குடும்ப நிகழ்வொன்றில் காஷிபாய் பாஜிராவை திருமணம் செய்தார்.[9] திருமணமானது மகிழ்ச்சிதரமானதாகவும் இயற்கையான குடும்ப கலாச்சாரத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தது.[10] பாஜிராவ் தனது மனைவியை காதலுடனும் மரியாதையுடனும் நடத்தினார்.
காஷிபாய்க்கும் பாஜிராவிற்கும் 4 புதல்வர்கள் இருந்தனர். 1721ம் ஆண்டு பாலாஜி பாஜிராவ் பிறந்தார். இவர் 1740 ம் ஆண்டு பாஜிராவின் மரணத்தை அடுத்து பேஷ்வா பதவிக்கு நியமிக்கப்பட்டார். இரண்டாவது மகன் இராமச்சந்திரா இளமையிலே இறந்தார். 4ம் மகன் ஜனார்த்தனும் இளமையிலே இறந்தபின் 1773-1774 ம் ஆண்டு காலப்பகுதியில் 3வது மகன் இரகுநாத் ராவோ பேஷ்வா பதவி வகித்தான். பேஷ்வா குடும்பத்தின் ஆண்கள் பெரும்பாலும் போர்க்களத்தில் பங்குகொள்ளாமல் இருந்தனர். காஷிபாய், பேரரசின் குறிப்பாக புனேவின் அனறாட நிகழ்வுகளை நிர்வகித்தார்.
பாஜிராவ் புந்தேல்கண்டின் அரசரான சத்ரசாலின் மகளான மஸ்தானியை இரண்டாவதாக மணந்தார். மஸ்தானி இஸ்லாமிய மதத்தவராவார். இத்திருமணம் அரசியல் நோக்கம் கொண்டதாயினும் பாஜிராவ் அனைத்து தடைகளையும் தாண்டி சத்ரசால் அரசரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.
எவ்வாறெனினும் இவரது குடும்பம் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மஸ்தானிக்கு வீட்டில் எந்தவிதமான உரிமைகளும் வழங்கப்படவில்லை.[11]. வரலாற்றாசிரியர் பாண்டுரங் பல்கவடேயின் வரலாற்று ஆதாரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட குறிப்பின்படி காஷிபாய் மஸ்தானியை பாஜிராவின் இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டார் எனக் கூறப்படுகிறது. ஆயினும் அவருடைய மாமியாரான இராதாபாய் மற்றும் மைத்துனர் சிமாஜி அப்பாவை எதிர்த்து காஷிபாயால் எதுவும் செய்ய முடியவில்லை. 18ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் இந்தியப் பெண்களால் முக்கியமான விடயங்களில் தலையிட அனுமதியில்லை.
பாஜிராவிற்கும் மஸ்தானிக்கும் இடைப்பட்ட உறவின் காரணமாக புனேவின் பிராமணர்கள் பேஷ்வா குடும்பத்தை புறக்கணித்தனர். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 1740ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் சிமாஜி அப்பா மற்றும் நானாசகேப் ஆகிய இருவரும் இவர்களை பிரிக்க முற்பட்டார்கள்.
Remove ads
பாஜிராவின் மரணம்
பாஜிராவ் படையெடுப்பிற்காக புனேவைவிட்டு வெளியேறியபின் மஸ்தானி வீட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். பாஜிராவின் உடல்நிலை மோசமாக இருந்தபோது மஸ்தானியை விடுவிக்கும்படியும், பாஜிராவை பார்க்க அனுமதிக்கும்படியும், நானாசாகப்பிடம் சிமாஜி கேட்டுக்கொண்டார். இருப்பினும் நானா சாகேப் மஸ்தானிக்குப் பதில் காஷியை அனுப்பிவைத்தான்.[12] பாஜிராவின் இறுதி காலகட்டத்தில் காஷிபாய் ஒரு விசுவாசமான மற்றும் நல்ல மனைவியாக சேவைபுரிந்தார் என்று கூறப்படுகின்றது. பாஜிராவின் இறுதிச் சடங்குகளை காஷிபாய் மற்றும் அவரது மகன் ஜனார்த்தன் ஆகியோர் நடத்தினர்.[13]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads